பக்கம்:மலர் மணம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 179

எனவே, எங்கள் பெற்றாேர்களின் விருப்பப்படியே, வட மொழிச் சடங்கு கொண்டே திருமணத்தை நடத்து வதற்கு ஒத்துக்கொண்டோம்.

பரியம் நிறைவேறியது. அழைப்பிதழ் அச்சிட்டு உரியவர் அனைவருக்கும் அனுப்பிைேம். திருமண நாளன்று உற்றாரும் உறவினரும் ஊராரும் நண்பர்களும் திரளாக வந்து குழுமினர். திருமணம் எங்கள் இல்லத் திலேதான்.

மணவேளை நெருங்கிற்று. அனைவரும் மர்ைமக்களை எதிர்பார்த்துக்கொண் டிருந்தனர். ஆனல் அந்நேரம் பார்த்து மணமக்கள் இருவரும் மணப்பந்தலுக்கு வர மறுத்துவிட்டனர். என் தந்தையும் மணமகன் தந்தை யும் துடித்தார்கள்-காரணம் கேட்டார்கள். ‘ தமிழ்த் திருமணம் நடத்தில்ைதான் நாங்கள் மணப்பந்தலுக்கு வந்து மணந்துகொள்வோம்’ என்று இருவரும் திடீர்ப் புரட்சி செய்தார்கள். மணமக்களின் பெற்றாேர்கள் தலையால் தண்ணிர் குடித்துப் பார்த்தார்கள்-ஒற்றைக் காலில் நின்று பார்த்தார்கள்-துள்ளினர்கள்-துடித் த ார் க ள்-தாண்டிக் குதித்தார்கள்-கூவினர்கள்கொக்கரித்தார்கள்-சாமதான பேத தண்டம் என்னும் நால்வகை வழிகளையும் கையாண்டு பார்த்தார்கள்ஒன்றும் நடக்கவில்லை. பக்கத்தில் இருந்தவர்கள் சிலர் நேரத்தின் நெருக்கடியை உணர்ந்து, ‘பிள்ளைகளின் விருப்பப்படியே செய்யுங்கள்’ என்று பக்கச்சொல் சொன்னர்கள். பிறகுதான் அப்பாவும் முத்தைய முதலி யாரும் வழிக்கு வந்தார்கள். எல்லா ஏற்பாடும் ஆன பிறகு திருமணத்தை அவர்கள் எப்படி நிறுத்த முடியும் ? எனவே எங்கள் நாடகம் அரங்கேறிவிட்டது -எடுத்த காரியத்தில் வெற்றி பெற்றுவிட்டோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/181&oldid=656189" இலிருந்து மீள்விக்கப்பட்டது