பக்கம்:மலர் மணம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 மலர்

இவ்வாறு இன்னும் எத்தனையோ அறிவுரைகள் அளிக்கப் பெற்றன. தமிழ்த் திருமணத்திலன்றி, வேறு எம்முறைத் திருமணத்தில் இந்தக் கருத்துக்களே மண மக்கள் பெற்றுப் பயனெய்த முடியும்?

எல்லாம் இனிது நிகழ, திருமணம் சிறப்புற நடந் தேறியது. வாழ்க மணமக்கள்!

கற்பகமும் பாண்டியனும் தனி வீட்டில் தனிக் கு டு ம் ப ம் நடத்திக்கொண் டி ரு ங் த ன ர். நான் அப்பாவுக்குத் துணையாகக் குடும்ப வேலைகளைக் கவனித் துக்கொண்டு வந்தேன். ஒவ்வொரு சமயம் வீட்டில் என் திருமணப் பேச்சும் அடிபடும்-நான் பி. ஏ. தேர்வில் தேர்ந்து விட்டதாகத் தேர்தல் முடிவும் வெளியாயிற்று. பெண் தரகர் சிலர் வீட்டிற்கு வருவதும் போவதுமா யிருந்தனர்.

மதுரையில் என் கல்லூரி நண்பன் ஒருவனுக்குத் திருமணம். அதற்கு நான் போய்வர வேண்டும். ஒருநாள் நான் வைகறை நான்கு மணி வண்டியில் செல்வதற்காக மூன்று மணிக்கே புகைவண்டி நிலையம்நோக்கி நடந்தேன். இருட்டுதான்-இன்னும் பொழுது விடிய மூன்று மணி நேரம் இருக்கிறது. கடை பாதை புகைவண்டிப் பாதையை ஒட்டிச் சிறிது தூரம் செல்லும். புகைவண்டி நிலையம் கொஞ்சதுரம் இருக்கும்போது, ரயில்பாதையை ஒட்டி ஒரு பெண் முக்காடு போட்டுச் சென்றுகொண் டிருந்தது தெரிந்தது. சென்றவள், குறிப்பிட்ட ஓரி டத்தில் தண்டவாளத்தின் பக்கத்தில் அப்படியே நின்று விட்டாள். சுற்று முற்றும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு மனத்தில் ஓர் ஐயம் ஏற். பட்டது. ஒரு பெண்பிள்ளே இருட்டு நேரத்தில் தனியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/184&oldid=656192" இலிருந்து மீள்விக்கப்பட்டது