பக்கம்:மலர் மணம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 183

தண்டவாளத்தின் பக்கத்தில் நிற்பது எதற்காக? அப்பொழுது தொலே தூரத்தில் ஒருவண்டி வந்து கொண் டிருப்பது தெரிந்தது. அது கூட்சு வண்டிதான். ஒகோ! என்னவோ செய்து கொள்வதற்காக இவள் வந்து நிற்கிருள் என்று புரிந்து கொண்டேன். ஒடினேன் ஒடினேன் ஓடோடியும் ஓடினேன். அவள் தண்ட வாளத்தின் குறுக்கே படுத்துக் கொண்டது தெரிந்தது. அவளே நானும் வண்டியும் நெருங்கிய நேரம் ஒன்றாக இருந்தது. வண்டிக்குமுன் வேக மாகத் தண்ட வாளத்தில் பாய்ந்தேன். அவளே அப்படியே அலாக் காகத் தூக்கிக் கொண்டு அப்பால் தாவினேன். நான் அவளே அப்புறப்படுத்தியதும் வண்டி எங்களைக் கடந் ததும் மயிரிழை இடைவெளியில் நடந்திருப்பதை அறிந்த போது எனக்குத் தலே சுழன்றது.

நான் தண்டவாளத்தைத் தாண்டியபோது காலில் ஏதோ தடுக்கியதாக உணர்ந்தேன். அதனல் அவளே ஏந்தியபடியே கீழே விழுந்து விட்டேன். காலில் கடுமை யாக வலித்தது. சிறிது நேரம் எனக்கு ஒன்றுமே தெரி யாது. அந்த உருவமும் அதிர்ச்சியடைந்துதான் இருக்க வேண்டும். அது இன்னும் என் கைப்பிடியிலிருந்து நழுவி விடுபடவில்லை. இரண்டு உருவங்களும் எதிர்பாரா வியப்புடன் படுத்தபடியே உரையாடத் தொடங்கின :

‘ ஆரது ? அத்தான ?”

‘ ஆ, அல்லியா ?”

“ ஏன் அத்தான் என்னைக் காப்பாற்றினிர்கள் ? . சமூகம் என்னே வாழவிடவில்லை என்றாலும் சாகவாவது

விடக்கூடாதா ?”

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/185&oldid=656193" இலிருந்து மீள்விக்கப்பட்டது