பக்கம்:மலர் மணம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 17

எவ்வளவோ குறிப்புணர்த்தியும் அவள் கேட்டாளில்லை. நானும் சில சொல்ல வாயெடுத்தேன். மாமா விட்டால் தானே அவர் என் இரு கன்னங்களிலும் பளிர் பளிர் பளிர் என்று மாற்றி மாற்றி அறைந்து தள்ளிவிட்டார். ஏண்டா தடிப் பயலே ! ஒரு பெண்ணே நீ எப்படியடா கை தீண்டியடிக்கலாம்? வயதுப்பெண் இருக்கு மிடத்தில் உனக்கு அடிக்கடி என்ன வேலையடா? இனிமேல் இங்கே வரவே வராதே, அல்லியின் முகத்தில் விழிக்கவே விழிக் காதே’ என்று கடிந்துபேசி, என் கழுத்திலும் கையைக் கொடுத்துத் தள்ளினர் என் தாய்மாமன்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த நிலை நேரும் ன்ன்று நான் கனவில்கூட எதிர்பார்க்க வில்லை. அங்கிருந்து திரும்பும்போது தாவிப் பாய்ந்து அல்லியின் கன்னத்தில் ஓர் அறை அறைந்து விட்டு, எங்கள் வீட்டுக்கு ஓடோடியும் வந்து விட்டேன். மாமாவும் துரத்திக் கொண்டே பின்தொடர்ந்தார். என் தந்தை யிடம் நடந்ததைக் சொல்லி வம்புக் கிழுத்தார். உண்மை யிலேயே அது ஒரு பெரிய குடும்பச் சண்டையாகி, ஒருவர்க் கொருவர் உறவை முற்றிலும் துண்டித்து விட்டது. குட்டிகுலேக்க நாய் தலையில் விடிந்தது’ என்னும் பழமொழி எங்கள் அளவில் சரியாய்ப் போயிற்று.

நாட்கள் கழிந்தன. யான் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்து, சென்னைக் கல்லூரிக்குப்படிக்க வந்து விட்டேன். அல்லியும் மங்கைப் பருவ மெய்திவிட்டாள். எஸ். எஸ். எல். சி. படிப்பு முடித்திருந்தாள். பலர் வந்து பெண் கேட்டுவிட்டுப் போவதாகத் தெரிகிறது.

நான் மட்டும் எங்கும் எவரிடமும் அல்லியைப் பற்றியும் அவள் தந்தையைப் பற்றியும் இழித்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/19&oldid=656198" இலிருந்து மீள்விக்கப்பட்டது