பக்கம்:மலர் மணம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 மலர்

பேசுவதும் எள்ளி நகையாடுவதுமே வழக்கம். ஏனே இந்தக் கெட்ட பகையுணர்வு மட்டும் என் நெஞ்சினின் றகலாது உறுத்திக்கொண்டே யிருந்தது!

இந்த நிலையில் உறவை வைத்துக் கொண்டிருக்கிற எனக்கு அல்லியினிடமிருந்து அஞ்சல் வந்திருக்கிறது என்றால், அதுவும் விரைவு அஞ்சல் என்றால், எனக்கு எப்படி யிருக்கும்? அவள் ஏன் எனக்கு எழுத வேண்டும்? அப்படி யென்ன தலை போகிற காரியம் நடக்க விருக்கிறது? உடனே நான் ஏன் போக வேண்டும் ? என்றெல்லாம் எண்ணினேன். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்படியே சென்றாலும் அவளே எங்கு வைத்துக் காண்பது? மாமா வீட்டுக்குத்தான் போக் முடியாதே. ஒருவேளை மாமாதான் அவளே எனக்கு மணமுடித்துவைக்க எண்ணி அவள் மூலமாகவே எழுதச் சொல்லியிருப்பாரோ? இல்லே, அப்படி யிருக்க முடியாது. மாமா குணம் எனக்கு நன்றாகத் தெரியும். ‘முர்க்கனும் முதலையும் கொண்டது விடா” என்னும் முதுமொழி மாமாவுக்காகத் தானே எழுந்தது! ஒருகாலும் எங்கள் உறவை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். அப்படி யென்றால் நான் போகவேண்டியதில்லை. அல்லி என்ன வோ கிறுக்குப் பிடித்துக் கிறுக்கியிருப்பாள். அதற்காக நான் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும் ?

இவ்வாறு ஊசலாடும் உள்ளத்தினய்ை, மீண்டும் ஒருமுறை கடிதத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கி னேன். ‘ அன்புள்ள அத்தான் ‘ போதுமே போதும், இந்த ஒருதொடரே போதுமே ! இதனை மீண்டும் மீண்டும் படித்தேன். அத்தான் என்ற சொல்லில்தான் எவ்வளவு பொருள் செறிந்துகிடக்கிறது. அந்தச் சொல் காந்தம் போல் என்னேக் கவர்ந்து விட்டது. எத்தனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/20&oldid=656208" இலிருந்து மீள்விக்கப்பட்டது