பக்கம்:மலர் மணம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227.

இச்செய்தி கேட்டு, இடியுண்ட நாகம்போல் ஆகி உள்ளம் உளைந்தே போனேன். என் அல்லியை நான் எங்கு கண்டு தேடுவேன்? என் இன்ப வாழ்வை-என் இன்னுயிரை நான் எங்குகண்டு தேடுவேன்? என் குணக்குன்றை-என் குடும்ப விளக்கை நான் எங்கு கண்டு தேடுவேன்? என் அன்பை-என் அரும்பெறல் செல்வத்தை நான் எங்குகண்டு தேடுவேன் ?

உயிரோடு இருந்தால் அல்லவா தேடிக் கண்டுபிடிக் கலாம்? ஒருவேளை தற்கொலை செய்துகொண்டிருந் தால்... ? அப்படியிருக்க முடியாது. எனக்காக இல்லா விட்டாலும், தன் மகள் மலருக்காகவாவது எங்கே யாவது உயிரோடு இருக்கத்தான் செய்வாள். இம்முறை நான் கண்டுபிடித்து விட்டால், இனி என் அல்லி, எனக்குத்தான்! அவள் தந்தை இனி எப்போதுமே அழைத்துக்கொண்டு போகமுடியாது. அந்தப் பேர்வழி போன மகளே இதுவரை தேடவே யில்லையாம். என்ன தான் இரும்பு நெஞ்சமோ ! ஆல்ை, அத்தை மட்டும் அழுது புலம்பிக்கொண் டிருக்கிறார்களாம்.

அல்லி எங்கே போயிருப்பாள் ? முன்பின் வெளியூர் சென்றறியாத ஒரு பெண்பிள்ளை திடீரென்று எங்கே போக முடியும்? வெளியூரில் தனியாக எப்படி வாழ முடியும்? ஏன் முடியாது ? அன்போ, சினமோ, இன்டமோ, துன்பமோ, இன்ன பிற மனவெழுச்சிகளோ தோன்றிவிட்டால், இதற்குமுன் செய்தறியாத-செய்ய முடியாது என்று சோர்ந்து கைவிட்ட-செய்யக் கூடாது என்று அஞ்சிய செயல்களைக்கூட மக்கள் துணிந்து செய்து முடிப்பர். வேறு வழியில்லை என்று தெரிந்த போது விரைவில் ஒரு முடிவுக்கு வந்து செயலாற்றுவது உயிர்களின் இயல்பு. எனவே, என் இன்ப அல்லியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/229&oldid=656239" இலிருந்து மீள்விக்கப்பட்டது