பக்கம்:மலர் மணம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மலர்

அத்தகைய சுவை விரும்பிகளை, யானையின் தனித் தனி உறுப்பினத் தடவிப் பார்த்து யானையாகக் கருதி மகிழ்ந்த குருடர்களாகவே மதிக்கிறேன். இது பற்றிப் பலருக்குக் கருத்து வேற்றுமை இருக்கலாம்; மன்னிக்க வேண்டும். இத்தகு கருத்துக்கள் எல்லாம், எங்கள் மாபெருந் தமிழ்ப் பேராசிரியரிடமிருந்து பெற்ற செல்வங் களாகும். எனவே, முழு அல்லியின் கைபுனைந் தியற்றாக் கவின் முழுவதையும் இப்போது நான் கண் கொட்டாது கண்டு சுவைத்தேன், களித்தேன்.

ஆயினும், இன்னும் என் கேள்விக்கு அல்லியிட மிருந்து பதில் வரவில்லை. ஆல்ை, முன்பு குனிந்தபடிநட்டபடி இருந்த தலையின் இயக்கத்தில் ஒரு முன்னேற் றம் தென்பட்டது. சற்று நிமிர்ந்து என்னைப் பார்ப்பதும், மீண்டும் குனிந்து கொள்வதுமா யிருந்தாள். மறுபடி யும் நான் அதே கேள்வியைக் கேட்டேன்.

‘ சொல்ல மாட்டாயா அல்லி ? ஏன் வரச்சொல்லிக் கடிதம் எழுதிய்ை ?” -

‘நீங்கள் எதுவும் கேள்விப்பட வில்லையா ?”

“இல்லையே”

இப்படி உரையாடல் தொடங்கியதும், யாரோ வரும்

ஒலி கேட்டது. யான் திடுக்கிட்டேன். அல்லி நடுங்கி ள்ை. ஒலியின் பிறப்பிடத்தைக் கூர்ந்து கவனித்தோம். பின்னர்த் தெரிந்தது பெருச்சாளியின் திருவிளையாடல் என்று. பெருமூச்சு விட்டோம். மிரண்டவன் கண் ணுக்கு இருண்டவெல்லாம் பேய்தானே !

இந்த நிலையில், “இருங்கள் அத்தான், இதோ வருகி றேன்” என்று சொல்லிவிட்டு அல்லி முன் கட்டிற்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/30&oldid=656270" இலிருந்து மீள்விக்கப்பட்டது