பக்கம்:மலர் மணம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மலர்

டிருந்தேன். கற்பகம் தெருவாயிற்படியை விளக்கஞ் செய்து கோலமிடச் சென்றுவிட்டாள்.

“இப்பொழுது வந்த வண்டியில்தான் வந்தாயா?இது அப்பா.

“தூக்கம் கெட்டுவிட்டு இருக்குமே. உடம்பு என்ன ஆவது ‘-இது அம்மா.

‘இதெல்லாம் இந்த வயதில் தெரியுமா. தூக்கம் கெட்டால் உடம்பு கெடுவது உனக்கும் எனக்கும் அல்லவா?-இது அப்பா.

“ எப்போது புறப்பட்டாய் ? -இது அம்மா.

‘நேற்று சாயுங்காலம்’-இது நான்.

இப்படி பேச்சு பரிமாறப்பட்டுக்கொண் டிருக்கும் போதே நான் பின்கட்டிற்கு நழுவி விட்டேன். பல் துளக்கினேன். அம்மா பாடிய வெந்நீர்ப் பல்லவியைக் காதில் வாங்காமல் தண்ணீரிலேயே குளித்தேன். காலேக் கடன்கள் எல்லாம் முடிந்தபிறகு முன்கட்டிற்கு வந்தேன். அப்பா சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டிருந்தார். அம்மா கூடத்துத் தூணில் சார்ந்துகொண்டு உட்கார்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். கற்பகமோ பம்பரம் போல் சுழன்று வீட்டு வேலைகளேக் கவனித்துக்கொண் டிருந்தாள். நான் மேசைமேல் கிடந்த ஞாயிறு மலரைக் கையில் எடுத்துக்கொண்டு ஊஞ்சலில் உட்கார்ந்தேன். எனக்கு விரைந்து சிற்றுண்டி செய்து கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், உடம்பு தள்ளாதிருந்தும் அம்மா எழுந்து கற்பக்த்துக்கு உதவியாக அடுப்பங் கரைக்குச் சென்றுவிட்டார்கள். அப்பா பேச்சைத் தொடங்கினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/50&oldid=656292" இலிருந்து மீள்விக்கப்பட்டது