பக்கம்:மலர் மணம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

விழாவுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே ஊரில் அரிசிபணம் எல்லாம் தண்டத் தொடங்கிவிடுவார்கள். எல் லோரும் ஏராளமாகத் தாராளமாகத் தருவார்கள். சேர்ந்திருக்கும் பொருள்களில் ஊரார் அனைவருடைய பங்கும் இருக்கும்.

விழாவன்று காலே ஒன்பது மணியளவில் ஊர்வலம் புறப்படும். அந்த ஊர்வலத்தின் அமைப்பே ஒரு தனி. ஊருக்கு நடுவில் உள்ளது குமரக்கோட்டம். முருகன் கோயிலைத்தான் சொல்லுகின்றேன். கோட்டத்தைச் சுற்றிலும் நான்கு நெடுந் தெருக்கள்-மாடவீதி என் பார்கள். கோட்டத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டு, நான்கு தெருக்களேயும் சுற்றிக்கொண்டு, ஊருக்கு அரைக்கல் தொலைவிலுள்ள மலையடிவாரத்திற்குச் செல்லும். ஊர்வலம் புறப்படும்போது ஒன்றும் கூட்டமே யிராது. ஊர் காட்டாண்மைக்காரரும் அவரது ஆட்சிக் குழுவினருந்தான் இருப்பார்கள். அவர்கள் கோயில் வாயிற்படியைவிட்டு நகர்ந்ததும், தெருவின் இருமருங் கிலுமுள்ள வீடுகளிலிருந்து பெண்டிரும் ஆடவரும் ஒவ் வொருவராக வந்து ஊர்வலத்தில் கலந்து கொள்வார்கள். அதாவது வீடுவாரியாக வந்துகொண்டிருப்பார்கள். ஒவ் வொரு வீட்டிற்கும் எதிரே நாட்டாண்மைக்காரர் நின்று வணக்கஞ்செய்து வருபவரை வரவேற்று ஊர்வல்த்தில் சேர்த்துக்கொண்டே வருவார். ஊர்வலம் எத்தனைக கெத்தனே வீடுகளைத் தாண்டுகிறதோ அத்தனைக் கத்தனை நீண்டுகொண்டே போகும். ஊர்வலத்தின் வலப்புற விளிம்பில் ஆண்களும், இடப்புற விளிம்பில் பெண்களும் ஒருவர்பீன் ஒருவராக வரிசையாக அணி வகுத்தச் செல்வர். நடுவிலே சிறுவர் சிறுமியரின் கட்டம் வரும். அனைவரும் தம்மை நன்கு அணிசெய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/59&oldid=656301" இலிருந்து மீள்விக்கப்பட்டது