பக்கம்:மலர் மணம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 மலர்

கொண்டிருப்பர் ; விழாவிற்கு வேண்டிய பொருள்களை ஏந்தி வருவர். -

ஊர்வலத்தின் முன்னுல் மேளம் முழங்கிக்கொண் டிருக்கும். இதற்கென்றே வெளியூரிலிருந்து சிறந்த மேள இசைக்குழுவினர் வரவழைக்கப்பட்டிருப் பார்கள். இன்னும் கொம்பு குழல், தாரை தப்பட்டி இவற்றிற்கும் குறைவிருக்காது. • . .

இந்த இசைக் குழுக்களுக்கு முன்னல் கரகம் ஆடு வார்கள். இதற்கு முன்னல் சிலம்பாட்ட்ம் சூடுபிடித்து நடக்கும். மனிதப் புலிகளும் (புலிவேஷம்) ஒன்றாே டொன்று பாய்ந்து மோதும். பகலாயிருந்தும், பொய்க் கால் குதிரைகள், தை-தை-தய்ய தை-தக்க தை’ என்று ஆடும். இந்தக் கண்கொள்ளா ஊர்வலக் காட்சியைக் கண்டுகளிப்பதற்காக, அண்மையிலுள்ள சிற்றுரர்களிலிருந்து மக்கள் வந்து பெருந்திரளாகக் கூடி விடுவர். உள்ளுர் மக்களின் உவகையைச் சொல்லவா வேண்டும் ! ஒரே ஆரவாரம் ! ஒரே அமளி ! ஊர் மக் களின் உள்ளத்திற்கும் உடலுக்கும் இந்த விழா ஒரு சிறந்த டானிக்.’ • , “ . -

ஊர்வலம்-கிழக்குத் தெருவிலிருந்து புறப்பட்டு, தெற்குத் தெருவைக் கடந்து மேற்குத்தெருவில் வந்து கொண்டிருக்கிறது. அந்தத் தெருவில்தான் எங்கள் இல்லம். உடல் லம் போதாததால் அம்மா வீட்டி லேயே தங்கிவிட்டார்கள். கானும் தங்கை கற்பகமும் அப்பாவும் தெருவில் இறங்கி முறைப்படி ஊர்வல வரிசை யில் ஒட்டிக்கொண்டு, தொடர்ந்தோம். ஊர்வலம் வடக்குத் தெருவை யடைந்தது. ம.வீடு அங்கே தான.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/60&oldid=656303" இலிருந்து மீள்விக்கப்பட்டது