பக்கம்:மலர் மணம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 59

ஆண்கள் வரிசையை நோக்கிப் பாய்ந்து சல்லடை போட்டுச் சலித்து எதையோ தேடிக்கொண்டிருந்த இரண்டு கண்களை ஒரு வீட்டு வாயிற்படியில் நான் கண்டேன். அந்தக் கண்கள், தேடிய பொருளை இப் பொழுது கண்டுபிடித்தும் விட்டன. அல்லியின் கண் களைத்தான் சொல்லுகிறேன். அதாவது அல்லி என்னைக் கண்டுபிடித்து விட்டாள். இருதரப்பிலுமே கண்டுபிடிப் பதற்குமுன் காணப்பட்ட பரபரப்பு கண்டுபிடித்தபின் இல்லை. எந்த இன்பமுமே இப்படித்தான் போலும்! இப்படி சொல்வதற்கும் இல்லை. மது உண்டு மயங்கிய வண்டு சிறகடித்தா பறக்கும்? செயலற்றுத்தானே காணப்படும்! மதுவைத் தேடி யலந்தபோது இருந்த பரபரப்பு உண்ட பின்னும் எப்படி யிருக்கமுடியும்?

ஊருக்குப் போயிருந்த மாமாவும் மாமியும் வந்து விட்டிருக்கிறார்கள். அவர்கள் குடும்பமும் - அல்லி உட்பட-ஊர்வலத்தில் வந்து கலந்து கொண்டது. மாமாவும் என் அப்பாவும் ஒருவரை யொருவர் ஏற இறங்க விறைப்புடன் பார்த்துக் கொண்டது போல் எனக்குப் பட்டது.

அல்லி பெண்கள் வரிசையில்-என் பின்பார்வையில் சிறிது தூரத்தில் இருந்தாள். அத்ாவது நான் அவளைப் பார்க்க வேண்டுமால்ை, பின்பக்கம் திரும்பித்தான் பார்க்கவேண்டும். நான் திரும்பித் திரும்பிப் பார்த்தால் யாராவது ஏதாவது நினைக்க மாட்டார்களா ? .ஆனல் அல்லியோ, நேர்ப் பார்வையில் என்னைப் பார்த்துக் கொண்டேயிருக்க முடியும். என்ன செய்வது-அவள் கொடுத்து வைத்தது அப்படி-நர்ன் கொடுத்து வைத்தது இப்படி. இருந்தாலும் விட்டேன ? என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/61&oldid=656304" இலிருந்து மீள்விக்கப்பட்டது