பக்கம்:மலர் மணம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனம் 77

ஆற்றலாலும் அசைக்க முடியாது பெயர்க்க முடியாது; மாற்ற முடியாது, வந்து மோதும் பொருள்களே உடை பட்டுச் சிதறும். உன்னை நான் பாராட்டுகிறேன்-மெச்சு கிறேன். உன் உறுதியை வாழ்த்துகிறேன். நீ என்னே எதிர்த்துப் பேசியதற்காக நான் எள்ளளவும் வருந்த மாட்டேன்; அதற்குப் பதிலாக மகிழ்ச்சியே கொள் கிறேன். தகப்பனிடத்தில் கரையாத அன்புடனும் கடமையுணர்ச்சியுடனும் நடந்து கொள்பவள் கணவ னிடத்தும் அவ்வாறே நடந்து கொள்வாய் என்பதை எண்ணும்போது, உன்னை மணந்து கொள்ள வேண்டும் என்றிருந்த எனது உறுதி இன்னும் இறுக்கம் பெற்று விட்டது. இது உனது சொந்த உரிமை. இதில் தலையிட உரிமையே இல்லை. நீ எனக்கு மனைவியாக வாய்த்த பிறகுங்கூட, இது போன்ற உன் உரிமைகளில் நான் குறுக்கிட மாட்டேன். ஏதேனும் ஒரு தேர்தலில் நீ எனக்கு எதிராகப் போட்டியிட்டாலும் வரவேற்பேன். இந்த உரிமைகளை யெல்லாம் உணராதவர்கள்தான், உப்புக்கு உதவாத காரியங்களிலெல்லாம் முரணிக் கொள்வார்கள். சரி, யாரோ வரும் அறிகுறி தெரிகிறது. இவ்விடத்தைவிட்டு அகன்று விடுவோம். ‘

நான் கற்பகத்துடன் சேர்ந்துகொண்டேன். அல்லி தம்பி தங்கையுடன் சென்றாள். பழையபடி விழாத் திடலை அடைந்தோம். .

அப்பா ஒரு பக்கத்தில் அமர்ந்து சிலரோடு அளவ ளாவிக் கொண்டிருந்தார். காமா மற்றாெரு பக்கத்தில் ஏதோ முடுக்காகப் | பேசிக்கொண்டிருந்தார். அத்தை யோ. சமையல் குழுவினரிடையே காணப்பட்டார்கள்.

உரிய கேரத்தில் விருந்து ஆரம்பமாயிற்று. ஊரார் அனைவரும் உண்டாட்டயர்க் து உள்ளங் களித்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/80&oldid=656325" இலிருந்து மீள்விக்கப்பட்டது