பக்கம்:மலர் மணம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 93.

மாலையில் வருவதாகச் சொல்லி ஒரு கும்பிடு போட்டு விட்டுக் குருசாமி நழுவி விட்டார். அவர் போன தும், ‘என்னிடம் என்ன சொல்லப்போகிறாய் ? என்று அப்பா பேச்சைத் தொடர்ந்தார் :

உங்களிடம் சொல் ல என்னவோ போல் இருக்கிறது”.

‘ இருக்கட்டும்; உன் மனத்தில் உள்ளதை ஒளிக் காமல் சொல் ”.

“ஒளிக்காமல் சொன்னல் ஒத்துக்கொள்வீர்களா ?”

சொன்னல் தானே தெரியும்.”

“ நான் நம் மாமா மகள் அல்லியைத்தான் மணந்து. கொள்ளப் போகிற்ேன்’.

என்ன ! அல்லியையா? அவன் அவளைக் கொடுக்க அழைக்கின்றானு உன்னே ? இதற்கு முன்பே பெரிய பகை -நீண்ட நாள் பகை. அவன் வீட்டுப் பரியத்தை வேறு நாம் தடுத்திருக்கிருேம். நேற்று வேறு அவன் தேர்தலில் நம்மிடம் முக்கறுபட்டுப் போயிருக்கிருன். இந்தநிலையில் அவன் எப்படி உனக்கு அல்லியைக் கொடுப்பான் ?”

அவர் கொடுப்பதாயிருந்தால் உங்களுக்கு உடன் பாடுதானே ?” -

ஒகோ, அவன் ஒப்புதலே முதலிலேயே பெற்று விட்டாயா ? இப்பொழுது என்னிடம் வந்திருக்கிருயா ?

“ அப்படி யெல்லாம் ஒன்று மில்லையப்பா”.

“ அப்படி யென்றால், எந்த நம்பிக்கையைக் கொண்டு அவன் மகளே மணந்து கொள்ளலாம் என்று கனவு காண்கிறாய் ?” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/95&oldid=656341" இலிருந்து மீள்விக்கப்பட்டது