பக்கம்:மலேயாச் சொற்பொழிவுகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை மலேயா தமிழ்ப் பண்ணையார் வருக என்ருர்கள். இசைந்தேன். கோடை விடுமுறை கூட கின்றது. சரியாக ஒன்றரைத் திங்கள் பயணமும் பணியும். வெளி காட்டில் வாழும் தமிழர் சிலேயைக் காணத் துடித்த என் உள்ளத்திற்கு iஅவர் தம் அழைப்பு விருந்தாயிற்று. மலேயா முழுதும் சுற்றி னேன். அங்குள்ள தமிழர்தம் அன்பும் ஆதரவும் என்னேத் திணற வைத்தன. பண்ணையார் தமிழ் வளர ஒல்லும் வகை யால் பணியாற்றுகின்ருர்கள். அவர் தம் பெரும் பணியில் |என்னுடையது ஒரு துளி. ஊர்தோறும் பெருங் கூட்டம் •a. வரவேற்றனர். சில்விடங்கள் பத்தாயிரத்துக்கும் மேற் பட்ட பெருமக்கள். அவர்தம் உணர்ச்சியும், கூட்டமும், அமைதியும் ஆர்வமும் என்ன அவர்களிடையில் பேச வைத்தன. பேசினேன், பேசியவற்றுள் சிலவே இன்று இந்த நூலாக வெளி வருகின்றது. கருத்தலேயின் வழியே : சென்றது. பேச்சு முறையிலேயே பெரும்பாலும் இந்நூல் அமைந்துள்ளது. கருத்துக்கள் சில மாறி மாறிக் கூட வக் திருக்கும். குணம் கொண்டு ஏற்க வேண்டுகின்றேன். l f r − . வருகவென அழைத்த மலேயா தமிழ்ப்பண்ணையாருக்கும் அதற்கு முதற் காரணராய திரு. கா. இராமநாதன் செட்டியார் | 锡 • - ·娜 ● 婚 e அவர்களுக்கும் இந்நூலே உரிமையாக்கி என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அ. மு. பரமசிவானந்தம்.