பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செங்குன்றுார் அப்பன் . 79 (வார்க்கடா-ஒழுகுகின்ற மதம்; மருப்பு-கொம்பு; குவடு" சிகரம்; ஊர்கொள்-நடத்தவல்ல; செகுத்து-முடித்து போர் கடா-போரைச் செலுத்துகின்ற; சிற்றாயன்- பாலகிருட்டி ணன், சார்வு-புகலிடம்) என்பது ஆழ்வாரின் பாசுரம். யானையைக் கொன்ற பாலகிருட்டிணனின் தீரச் செயலை நினைந்து, 'கும்பமிகு மதயானை மருப்பு ஒசித்து, கஞ்சன் குஞ்சிபிடித்து அடித்தபிரான்?’’’ என்று பெருமிதங்கொண்டு பேசுவர் திருமங்கை மன்னர், நம்மாழ்வாரின் பாசுரத்தை நினைந்தே ஆகாரிய ஹிருதயம் இந்தத் திவ்விய தேசத்தில் சூரம், வீரம் முதலிய குணங்கள் விளங்கும் என்கின்றார். 'மகாமதிகள் அச்சம்கெட்டு அமரும் செளர்யாதிகள், சிற்றாற்றிலே கொழிக்கும்' என்பது சூத்திரம். மகாமதிகள்-விதுரன் போன்றவர்கள், செளர்யம் --சூரனது தன்மை. குவலயாபீடம், சானுரன், முஷ்டிகன் கம்சன் முதலானவர்களைக் கொன்று வெளிப் படுத்திய சூரத்தனம் முதலானவைகள் இந்தத் திவ்விய தேசத்தில் ஆற்றுக்குள்ளிருக்கும் மணி, முத்து முதலான வைகள் கரையிலே கொழித்துத் தோற்றுமாறு போலே பிரகாசிக்கும் என்பது கருத்து. அடுத்த பாசுரத்தில் எம்பெருமானின் தன்மையையும் பெருமையையும் பேசுகின்றார் ஆழ்வார். - 18. பெரிய திரு 3. 10, 3 19. ஆசா. ரிஹிரு. 174.