பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மலைநாட்டுத் திருப்பதிகள் வழியில் கண்ணனைக் கொல்லுவதற்கென்றே குவலயாபீடம் என்ற யானை மதுவூட்டி நிறுத்தப்பெற்றிருக்கின்றது. முதலில் கண்ணனால் அந்த யானையின் உயிர் செகுக்கப் பெறுகின்றது. மலையின் மீதுள்ள இரண்டு கொடுமுடி களைத் தகர்ப்பதுபோல் கண்ணன் அந்த யானையின் கொம்புகளைப் பிடுங்கி யானையைக் கொன்று அதன்மீது இவர்ந்திருக்கும் பாகனையும் யமபுரத்திற்கு அனுப்பு கின்றான். அரண்மனை வாயிலைக் குறுகும்பொழுது சானூரன், முஷ்டிகன் என்ற இரண்டு மல்லர்கள் சிறுவர் களை எதிர்க்கின்றனர். கண்ணன் அந்த இரண்டு மல்லர் களையும் தொலைத்தொழிக்கின்றான். அத்தாணி மண்டபத்தினுள்ளே நுழைந்த வுடன் கம்சனைச் சூழ்ந்து போர்க்கோலத்துடனிருந்த அரசர்களைப் புறமுதுகிட்டோடச் செய்து அரியாசனத்திருந்த கம்சனின் உயிரையும் போக்குகின்றான். இத்தனைச் செயல்களையும் ஒரு சேர முடித்த கண்ணன் திருச்செங்குன்றுார்த் திருச் சிற்றாற்றில் அர்ச்சை வடிவமாக எழுந்தருளியுள்ளான். அந்தத் திருப்பதியே தமக்குப் புகலிடமாகும் என்று திரு வுள்ளமாகின்றார் ஆழ்வார். 'வார்கடா அருவி யானைமா மலையின் மருப்பினைக் குவடுஇறுத்து உருட்டி ஊர் கொள்திண் பாகன் உயிர்செகுத்து அரங்கின் மல்லரைக் கொன்றுசூழ் பரண்மேல் போர்கடா அரசர் புறக்கிட மாடம் மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த சீர்கொள்சிற் றாயன் திருச்செங்குன்றுாரில் 梦 兹亨 திருச்சிற்றாறு எங்கள்செல் சார்வே', 17. திருவாய், 8.4. 1.