பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செங்குன்றுார் அப்பன் 77 சோலைகளின் இயற்கை எழில்களைத் துய்த்த வண்ணம் ஆற்றங்கரையை நோக்கி நடக்கின்றோம். சிறிது தூரத்தில் 'செறிகுலை வாழை கமுகுதெங் கணிசூழ் திருச்செங்குன் றுார்த்திருச் சிற்றாறு’** |செறி.நெருங்கிய; கமுகு-பாக்கு.) நம் கண்ணுக்குத் தென்படுகின்றது. சிறிது தொலைவில். “செங்கயல் உகளும் தேம்பணை புடைசூழ் திருச் செங்குன் றுார்த்திருச் சிற்றாறு’** என்று ஆழ்வார் குறிப்பிடும் திருச்சிற்றாற்றையும் காண் கின்றோம். அவற்றை நெருங்குவதற்கு முன்னரே சாலை யோரத்தில் சற்று உயரமான இடத்தில் அகன்றதோர் இடப் பரப்பிலுள்ள திருக்கோயில் நம் கண்ணுக்குத் தட்டுப்படு கின்றது. முன்வாயில் நாற்புற மதிற்கவர்கள் கட்டப் பெறாத நிலையில்-இடிந்து பாழடைந்த நிலையில் - காணப் பெறுகின்றது. முன்வாயிலைக் கடந்து கோயிலை நண்ணு கின்றோம். திருக்கோயிலைக் குறுகும்போதே நம்மாழ் வாரின் பாசுரங்கள் நம் மனத்தில் குமிழியிடத் தொடங்கு கின்றன. இத்திருப்பதி எம்பெருமான்மீது நம்மாழ்வார் மட்டிலும் ஒரு திருவாய்மொழி அருளியுள்ளார். கண்ணன் பிறந்த பொழுதிலிருந்தே அவனைக் கொல்லக் கம்சன் பல்வேறு உபாயங்களை மேற்கொள்ளுகின்றான். வில்விழவு ஒன்று ஏற்படுத்தி அதனைக் காரணமாகக் கொண்டு அக்ருரனை அனுப்பிக் கண்ணனைத் திருவாய்ப் பாடியினின்றும் மதுரைக்கு வரவழைக்கின்றான். கண்ண னும் பலராமனும் மதுரையை நோக்கி வருகின்றனர். 14. திருவாய் 8, 4 4, H 5. இடி 8. 4: 2. 16. இப்பொழுது திருப்பணிமுடிந்து கோவில் நன்னிலை யில் உள்ளது. (1986)