பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கடித்தானத்து உறை திருமால் 95. கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை என்று மண்டினார்’** {மெய்யம் - திருமெய்யம்; கச்சி - காஞ்சி, பேர் . திருப்பேர் நகர்; மல்லை - திருக்கடல் மல்லை: மண்டினார் . மிகவும் விரும்பினார்.) என்று குறிப்பிடுவர். ஆகவே, திருக்கடித்தானப் பகுதியையும் ஆழ்வாரது உள்ளத்தையும் எம்பெருமான் ஒக்க நினைத்துப் பரிமாறுவதாக அருளிச் செய்யப்பெற்றது. இக்கருத்து இன்னொரு பாசுரத்தில் இன்னும் தெளிவாக உள்ளது. திருக்கடித்தானத்தைக் கோயிலாகக் கொண்ட எம்பெருமான் தனது நெஞ்ச நாட்டையும் குடியிருப்பாகக் கொண்டு விட்டான் என்கின்றார் ஆழ்வார். மாயப் பிரான்என வல்வினை மாய்ந்துஅற. நேயத்தி னால்நெஞ்சம் நாடு குடிகொண்டான், தேசத்(து) அமரர் திருக்கடித் தானத்தை, வாசப் பொழில்மன்னு கோயில்கொண் டானே’** (நேயம் - அன்பு, தேசம்-தேஜஸ் (ஒளி); அமரர் - நித்திய சூரிகள்: மன்னு - கூடின.) சோழநாடு, பாண்டிநாடு, மலைநாடு என்றாற்போல் 'நெஞ்சநாடு’ என்று ஒரு நாட்டைக் குறிப்பிடுகின்றார் ஆழ்வார். இங்கு ஈடு: "ஸ்ம்ச்லேஷ விச்லேஷங்களாலே ஒரு த்ரிபாத் விபூதியாக்கினானாயிற்று இவர் திருவுள்ளத்தை”.* 13. திருக்குறுந்-19. 14. திருவாய். 8. 6:4. 15. த்ரிபாத் விபூதி - பரமபதம்: எம்பெருமானுடைய செல்வத்தை நான்கு கூறுகளாக்கி மூன்று கூறுகள் பரமபதம் என்றும், ஒரு கூறு இவ்வுலகம் என்றும். கூறுவர்.