பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 மலைநாட்டுத் திருப்பதிகள் என்று திருவாய் மலர்ந்துள்ளமை ஈண்டு நினைவுகூரத் தக்கது. ஆழ்வார்கள் போன்றவர்களின் உள்ளத்தில் எம்பெருமானுக்கு வாசம் கிடைத்துவிட்டால் திருப்பாற் கடல், பரமபதம் முதலான இடங்களிலும் அவனுக்கு, விருப்பம் குறைந்துவிடுமாம். இது, “கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும் புல்லென்று ஒழிந்தனகொல்? ஏபாவம்,-வெல்ல நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான், அடியேனது உள்ளத்து அகம்’’’ |கல் - திருவேங்கடமலை; கணைகடல் - ஒலிக்கின்ற பாற். கடல்; வான் நாடு - வானுலகம், புல் என்று - அற்பமாய் வெல்ல - மிக நெடியான் - உயர்ந்தவன்; உள்ளம்-நெஞ்சம்.) என்ற பாசுரத்தால் விளக்கமாகும். இங்ஙனம் ஞானியர் இதயமே எம்பெருமானுக்கு உகப்பான இடமாகில் பரமபதம் போன்ற இடங்களை அவன் கைவிடவேண்டுமல்லவா? அப்படி விட்டுவிட்டதாகவும் தெரியவில்லையே; இதற்குக் காரணம் என்ன? என்ற வினா எழுகின்றது. ஞானியர் திவ்விய தேசங்களில் சிறப்பான பற்று வைத்திருப்பதனால் அவர்களுக்குகந்த இடம் தமக்கும் விருப்பமானதே என்கின்ற 'எண்ணத்தினாலும், இங்கு தாம் வசித்ததனாலன்றோ தமக்கு ஞானியரின் இதயத்தில் வசிக்கும் பேறு கிடைத்தது. என்ற நன்றியுணர்ச்சியினாலும் எம்பெருமானுக்கு திவ்விய, தேசமும் விருப்பமான இடமாகின்றது. இதனைத் திருமங்கையாழ்வார். 12. பெரி. திரு..ே