பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கடித்தானத்து உறை திருமால் 93 என்ற பாசுரத்தால் அருள்கின்றார். திருக்கடித்தானம் என்ற திருப்பதியையும் தன்னுடைய சிந்தையையும் ஒன்றாக நினைப்பதைப்பற்றி, "அங்குத்தை வாஸ்ம் சாதனம்; இங்குத்தை வாசம் ஸாத்யம்' என்று ரீவசன பூஷணம் குறிப்பிடுவது சிந்திக்கத்தக்கது. அதாவது, திவ்விய தேசங் களைவிட ஞானியரின் திருமேனியில் எம்பெருமான் கொண்டுள்ள மதிப்பு அளவற்றது: அவன் திவ்விய தேசங்களில் எழுந்தருளியிருப்பது சேதநரை அகப்படுத்திக் கொள்ளுகைக்காகவேயாதலால், அங்கு வசிப்பது சாதனம்; இச்சேததன் திருந்தி இவனுடைய இதயத்தினுள்தான் வசிக்கப்பெற்றது. அத்திவ்விய தேசவாசமாகின்ற கிருஷியின் (வேளாண்மை) பயனாகையால் ஞானியரிடத்தின் வாசமே எம்பெருமானுக்குச் சிறந்த பயனாகும். இதனையே இந்த ஆழ்வார் பிறிதோரிடத்தில், 'இமையோர் வணங்க மலைமேல்தான்நின்று என்மனத்துள் இருந்தான்' |மலை - திருமலை; இமையோர் - நித்திய சூரிகள்.) என்று குறிப்பிட்டுள்ளமை காண்க. பெரியாழ்வாரும், “பனிக்கடலில் பள்ளிக்கோளைப் பழகவிட்டு ஓடிவந்து,என் மனக்கடலில் வாழவல்ல மாய மணாள நம்பி’** (பனிக்கடல்-குளிர்ந்த திருப்பாற்கடல்; பள்ளிக்கோளை - பள்ளிகொள்ளுதலை; பழகவிட்டு-பழகியதாகவிட்டு (மறந்து விட்டு),} 9. பூரீவச. பூஷ-இரண்டாம் பிரகரணம்-171 அங்குத்தை-அந்த இடத்தில்: சாதனம்-கருவி; சாத்தியம் - சாதனத்தால் பெறுவது; பேறு. 10. திருவாய், 10. 4 : 4. 11. பெரியாழ். திரு. 5. 4:9.