பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மாழ்வார் மட்டிலுமே ஒரு பதிகத்தால் மங்காளாசாசனம் செய்துள்ளார்." இத் திருப்பதியை நெருங்க நெருங்க நம்மாழ்வாரின் பாசுரங்கள் ஒவ்வொன்றாக நம் சிந்தையில் குமிழியிடத் தொடங்குகின்றன. அவர் பெற்ற் அநுபவத்தையே நாமும் பெற முயல்கின்றோம். எம்பெருமான் இரவு பகலென்று பாராமல் தன்னையே நினைத்து வாழுமாறு ஆழ்வாருக்குத் திருவருளைச் சுரந்தான்; அந்தப் பேரருளை எண்ணி எண்ணி இனியராகின்றார் ஆழ்வார். "எல்லியும் காலையும் தன்னை நினைந்துஎழ நல்ல அருள்கள் நமக்கேதந்து அருள்செய்வான்’’’ (எல்லி - இரவு: அருள் - கிருபை.: என்பது அவரது திருவாக்கு நமக்கே தந்து அருள் செய்வான்’ என்பதால் எம்பெருமான் வேறொருவருக்கும் இவ்வருள் பாவிக்கவில்லை என்பது ஆழ்வாரின் நினைப்பு. தாம் பெற்ற பேற்றினை நித்திய சூரிகளும் பெறவில்லை என்பதாக எண்ணுகின்றார் ஆழ்வார். அடுத்து, அந்த அருள் எங்ங்னம் பாலிக்கப்பெற்றது. என்பதைச் சொல்லப் புகுகின்றார் ஆழ்வார். அ♔ ഓ ഒ് 'திருக்கடித் தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான்கண்டீர்' ஒருங்கஅடுத்து - ஒருக்கடுத்து; ஒன்றாக நினைத்து என்றபடி உறையும் - வதியும்.) 6. திருவாய், 8.5. 7. டிெ 8.5:1. 8. டிெ 8.6:2.