பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கடித்தானத்து உறை திருமால் 9i நடந்தே அந்த ஊரை அடையலாம். கோடை காலமாக இருப்பினும் தோப்பும் துரவுமாக உள்ள இடமானதால் இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்த வண்ணம் நடந்து செல்வது சிறப்பு, சுமார் ஒன்றரை மணி நேரத்தில் நடந்தே "பூத்த பொழில் தண் திருக்கடித்தானத்தை” அடைகின் றோம். நறுமலர்கள் நிறைந்த சோலைகளும் குளிர்ச்சியைத் தரும் தோப்புக்களும் சூழ்ந்த ஊரானதால் நடந்த களைப்புத் தோன்றுவதில்லை. இப்பகுதியைக் குறிக்கும் போது ஆழ்வாரும் சோலைத் திருக்கடித்தானம்' என்றே குறிப்பிடுகின்றார். ஆழ்வார் காலத்தில் இந்தத் திருப்பதியில் வேதியர்கள் கூட்டம் மிக்கிருந்தது. அவர்கள் சதா நான்கு மறைகளையும் நிலைநின்று முழங்கும்படி செய்து வருவர். இதனை நினைவில் கொண்டே ஆழ்வாரும், "நற்புகழ் வேதியர் நான்மறை நின்று அதிர் கற்பகச் சோலைத் திருக்கடித் தானமே.”* {வேதியர் - பிராமணர், மறை - வேதம்; நின்று அதிர் - நிலைநின்று முழங்கும். என்று கூறியுள்ளதாகக் கருதலாம். மரங்கள் செறிந்து குளிர்ச்சியை உண்டாக்குவதால் தேவர்கள் நாட்டிலுள்ள கற்பகச் சோலையை நினைவுகூரும்படி செய்கின்றது: திருக்கடித்தானத்துச் சோலையைக் கற்பகச் சோலையுடன் ஒப்ப நோக்கும்படியும் தூண்டுகின்றது. 'மணத்தையுடைய இடம் எனப் பொருள்படும் திருக்கடித்தானம்' என்ற பெயர் இவ்வூருக்கு மிகவும் பொருந்தும் என்று நினைக்கவும் தோன்றுகின்றது. இத் திருப்பதி எம்பெருமானை 3. திருவாய். 8.6 : 6. 4. டிெ 8.6 : 1.1. 5. டிெ 8.6 : 1.0.