பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

彎 மலைநாட்டுத் திருப்பதிகள் 'பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும், நாற்கடலும் துண் நூல தாமேசைமேல், பாற்பட்டு) இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான் குருந்துஒசித்த கோபால அன் ே (பனிவிசும்பு-பரமபதம்} என்ற பேயாழ்வார் பாசுரத்தில் பரத்துவம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்ந ஐந்து நிலைகளும் ஒருங்கே வந்துள்ளமை அறியப்பெறும், குருந்த மரத்தை முறிக்தெறிந்த கண்ணன் என்பது விபவாவதார நிலையைக் குறிக்கின்றது. இவனே திருப்பாற்கடலி லும் (வியூகம்), திருவேங்கடத்திலும் (அர்ச்சை), பர ம ய த த் தி லும் (பாத்துவம்), யோகியர் மனத்திலும் (அந்தர்யாமித்துவம்) எழுந்தருளியிருப்பதாகக் கூறப்பெறுவதால் எல்லா நிலை களிலும் இருப்பவன் எம்பெருமான் என்பது பெறப்படும். இந்த எண்ணங்கள் நம் மனதில் எழுந்தவண்ணம் திருக்கடித்தானம் என்ற திவ்விய தேசத்திற்குப் புறப்படச் சித்தமாகின்றோம். கோட்டயத்தில் அதிகாலையில் நீராடித் அ ஆடையை உடுத்திக் கொண்டு இருப்பூர்தி நிலையத் திற்கு வருகின்றோம். வண்டி காலை சுமார் ஏழரை கணிக்குப் புறப்படுகின்றது. அதில் ஏறி அரைமை நேரத்தில் செங்கனாச்சேரி என்ற ஊரை அடைகின்றோம், அங்கு இறங்கிப் பேருந்து மூலம் திருக்கடித் திானத்தை அடையலாம். செக்கனாச்சேரியிலிருந்து இரண்டு மைல் ) தாலைவி அள்ளது திருக்கடித்தானம் என்னும் திருப்பதி. ஆகவே 2. மூன் திருவத் - 32,