பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. திருக்கடித்தானத்து உறை திருமால் வைணவ தத்துவப்படி இறைவன் எழுந்தருளியிருக்கும் நிலைகள் பரத்துவம், வியூகம். விடவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்ற ஐந்து என்பதை தாம் அறிவோம். இறைவன் எத்த நிலையில் இருப்பினும் தன் ஆற்றல் முதலியவற்றில் குறைவுபடான் என்பதனையும் அறிவோம். இதனால்தான் ஆழ்வார்கள் பாசுரங்களில் இந்நிலைகளில் ஒன்றோ பலவோ கலந்து வருவதைக் காணலாம். எடுத்துக்காட்டாக, "வேங்க டத்து அசி யைப்பரி கீறியை வெண்ணெய் உண்டுஉர வினிடை யாப்புண்ட தீங்க கும்பினை,தேனைநன் பாலினை அன்றி என்மனம் சிந்தைசெய் யாதே’’’ என்று திருமங்கையாழ்வார் கூறுவதைக் காண்க வேங்கடத்து அரி என்ற தொடர் திருவேங்கடமுடை யானைக் குறிக்கின்றது. இஃது அர்ச்சாவதார நிலை . ‘பரிகீறியை” என்பது குதிரை வடிவாய் வந்த கேசி என்ற அசுரனைக் கொன்ற எம்பெருமான், இது விபவதார நிலை. *உரலிடை யாப்புண்ட தீங்கரும்பு’ என்பது யசோதையால் உரலிடைக் கட்டுண்ட பாலகிருட்டிணனைக் குறிப்பது : இதுவும் விபவ நிலையே. எனவே, இப்பாசுரப் பகுதியில் அர்ச்சாவதார நிலையும் விபவாதார நிலையும் கலந்து வந்துள்ளமை அறியக்கிடக்கின்றது. 1. பெரி திரு, 7.3 : 6