பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 மலைநாட்டுத் திருப்பதிகள் கொடுத்துப் பின்பு சம்சாரமாகிய நாடகத்தை அறுக்கும். என்று சொல்லுவதை முன்னர் சம்சாரத்தை அறுத்துப் பின்னர்த் திருநாட்டில் கொண்டு செலுத்தும் என்று சொல்லி :பிருக்கவேண்டும். முறைமாற்றிச் சொன்னதன் சுவையை நம்பிள்ளை வெளியிடுவதைக் காண்மின்: - "நாடு அராஜக மானால் முன்னம் ராஜபுத்திரன் தலையிலே முடியை வைத்துப் பின்னை விலங்கு வெட்டிவிடுமாப்யோலே என்று. மன்னன் மகன் ஏதோ குற்றம் புரிந்ததற்காகச் சிறை பிலடைக்கப்பெற்று விலங்கிடப் பெற்றிருந்தான்; திடீரென்று மன்னன் இறந்தான்; சிறையிலிருந்த அரசகுமாரன்மீது முடி கவிக்க வேண்டியதாயிற்று. அந்நிலையில் ஒரு நொடிப் பொழுதும் நாடு அரசனற்ற நிலையில் இருக்கக் கூடாதென்று முன்னர் அவன் தலையில் கிரீடத்தை வைத்துப் பின்னர் சிறை வீடு செய்வார்களாம். அது போல என்க. இந்த உணர்ச்சிப் பெருக்கில் திளைத்த நிலையில், 'வரவேண்டும் கண்டாய், மதிகலங்கி விக்குள் பொரவே உயிர்மாயும் போழ்து - பரமேட்டி! செங்குன்றுார் மாலே! சிறைப்பறவை மேல்கணகப் பைங்குன்றுஊர் கார்போல் Lдођg““ (ஊர் ஊர்ந்துவரும்; கார் - மேகம்; என்ற திவ்விய கவியின் வாக்கை நினைவு கூர்கின்றோம். தாமும் அப்பெருமானுக்கு அதே வேண்டுகோளை விடுக் கின்றோம். பக்திப்பெருக்கோடும் நிலையில் பிரசாதங்களைப் பெற்று நம் இருப்பிடத்தை அடையச் சித்தமாகின்றோம். 40. நூற் திருஅந், 64.