பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செங்குன்றுார் அப்பன் 87 'முக்கண் அம்மானை, நான்முகனை' என்றது 'சிவபிரானுக் கும் நான்முகனுக்கும் அந்தர்யாமியாக இருக்கும் எம். பெருமானை' என்பது குறிப்பு. இந்த எண்ணங்கள் யாவும் நம் சிந்தையில் எழுந்த வண்ணம் திருக்கோயிலினுள் நுழைகின்றோம். இத்திருப்பதி எம்பெருமானின் திருநாமம் இமையவர் அப்பன் என்பது: தாயார் செங்கமலவல்லி. இவர்கள் இருவரையும் மனமாரச் சேவிக்கின்றோம். கிழக்கே திருமுகமண்டலங் கொண்டு நின்ற திருக்கோலத்தில் இவர்கள் சேவை சாதிக்கின்றனர். அவர்கள் சந்நிதியிலேயே திருச்செங்குன்றுார்த் திருச்சிற்றாற்றுத் திருவாய்மொழிப் பதிகத்தைப் பக்தியுடன் ஒதிப் பரவசம் அடைகின்றோம். - “தேனை நன் பாலைக் கன்னலை அமுதைத் திருந்து உல குண்டஅம்மானை, வான நான் முகனை மலர்ந்ததண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்தமா யோனை' (கன்னல் - கருப்பஞ்சாறு; கொப்பூழ் - நாபி) என்று நம்மாழ்வார் அப்பெருமானை அநுபவித்தது போன்றே நாமும் அநுபவிக்கின்றோம். "இப்பத்தும், வானின்மீது ஏற்றி அருள் செய்துமுடிக்கும் பிறவிமா யக்கூத் தினையே’’’ என்று ஆழ்வார் பணித்தவண்ணம் நம்மைப் பரமபதத்தில் ஏறவிட்டு இறைபணியாகின்ற கைங்கரியத்தைப் பெறச் செய்து பிறப்பாகிய நாடகத்தையும் முடித்து விடும் என்ற உணர்ச்சியைப் பெறுகின்றோம். முந்துறப் பரமபதத்தைக் 38. திருவாய்.8.4:11 39. டிெ 8.4:11