பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கடித்தானத்து உறை திருமால் 97 ஆழ்வாரது நெஞ்ச நாட்டில் எம்பெருமான் தனியாக வந்து குடியேறவில்லை. திருக்கடித்தானம் என்ற திவ்விய தேசத்துடன் தன் நெஞ்சத்தில் புகுந்துவிட்டான் என்று மேலும் விளக்குகின்றார்.

  • கோயில்கொண் டான்தன் திருக்கடித் தானத்தை கோயில்கொண் டான்.அதனோடும்என் நெஞ்சகம் கோயில்கொள் தெய்வம்எல் லாம்தொழ, வைகுந்தம் கேரியில்கொண் டகுடக் கூத்தவம் மானே’’**

(தெய்வம் - நித்திய சூரிகள்.) திருக்கடித்தானத்தைக் கோயிலாகக் கொண்ட எம்பெருமான் ஆழ்வாரின் நெஞ்சகத்தில் புக விரும்பினான். அப்போது அந்த இடத்தை விட்டுத் தான் மாத்திரமே புக நினைத்தான். அப்படியாகில் செருப்பு வைத்துத் திருவடி தொழுவாரைப் போலே ஆக ஒண்ணாது' என்று தோன்றிற்றாம். ஆகவே அத்திருப்பதியுடன் வந்து புகுந்தனனாம். 'அரவத்து அமளியி னோடும் அழகிய பாற்கடலோடும், அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து, பரவைத் திரைபல மோதப் பள்ளிகொள் கின்ற பிரானை' 18. திருவாய். 8. 6 : 5. 19. திருக்கோயிலுக்குச் சென்ற ஓர் அன்பர் நடை யனைக் கோபுர வாயிலில் விட்டுவிட்டு உள்ளே பெருமானைச் சேவிக்கச் சென்றாராம். அங்கும அவருக்கு நடையன் மீதே நினைவு குடிகொண் டிருந்ததனால் தீர்த்தம் சாதிக்க' என்று. சொல்வதற்குப் பதில்ாகச் செருப்பு சாதிக் என்றாராம. سس-?سه