பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 மலைநாட்டுத் திருப்பதிகள் (அரவம் - பாம்பு; அமளி - படுக்கை, அரவிந்தப்பாவை . பெரிய பிராட்டியார்; அகம்படி - உடலாகிற இடம்: பரவை . திருப்பாற்கடல்; திரை - அலை.) . என்று பெரியாழ்வார் குறிப்பிடுவதுபோல இங்குத் திருக்கடித்தானத்தோடு மட்டிலும் வந்தான் அல்லன். "தெய்வம் எல்லாந் தொழ வைகுந்தம் கோயில் கொண்ட" என்பதனால், நித்திய சூரிகளுடன் வைகுந்தத்தையும் கூட்டிக் கொண்டு வந்தான் என்பதைக் குறிப்பிடுகின்றார். "குடக்கூத்த அம்மான்’ என்பதனால் அவதாரத் திருவிளையாடல்கட்குக் கருவியாயுள்ளவற்றையும் கையிலே கொண்டுவந்தான் எ ன் ப ைத யு. ம் காட்டுகின்றார். வைகுந்தத்து வைபவங்களோடும் . கிருஷ்ணாவதார வைபவங்களோடும் தம் நெஞ்சத்தில் குடியேறினான் என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றார் ஆழ்வார். அடுத்து, திருக்கடித்தானம் என்ற திருப்பதியை ஏத்த வேண்டும் என்ற இன்றியமையாமை கூட இல்லை, அத்தலத்தை நெஞ்சாலே நினைத்தாலும் போதும் என்று கூறுகின்றார் ஆழ்வார், 'கொண்மின் இடர்கெட உள்ளத்துக் கோவிந்தன் மண்விண் முழுதும் அளந்தவொன் தாமரை, மன்னவர் தாம்தொழ வானவர் தாம்வ ந்து, நண்ணு திருக்கடித் தான நகரே' (தாமரை - தாமரை போன்ற திருவடி (உவமஆகு பெயர்); இடர் - துக்கம்.) - என்பது பாசுரம், இடக்கை வலக்கை அறியாத பூமியில் உள்ள்ார் தொழுவதற்காக அவர்கட்கு முகங் கொடுத்து 29. இபரியாழ். திரு. 2: 10, 2. திருவாய், 3, 5, 7,