பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 மலைநாட்டுத் திருப்பதிகள் தன்னை அவன் பெறுவதற்கு உறுப்பான நிலம் திருக்கடித் தானமேயாதலின், அதன்மீது மிக்க காதலன் ஆனான் என்கின்றார். "தாயப் பதிகள் தலைசிறந்து எங்கு எங்கும், மாயத்தி னால் மன்னி வீற்றிருந் தான்உறை, தேசத்(து) அமரர் திருக்கடித் தானத்துள், ஆயர்க்(கு) அதிபதி அற்புதன் தானே: (மாயத்தினால் - இச்சையினால், மன்னி பொருந்தி, தேசத்து அமரர் . ஒளியுடன் கூடிய நித்திய சூரிகள்: ஆயர் . இடையர்: அதிபதி - தலைவன்.) என்பது ஆழ்வாரின் திருவாக்கு. எம்பெருமான் எண்ணற்ற கல்யாண குணங்கட்கு இருப்பிடமானவன் என்பதை நாம அறிவோம். மேற் குறிப் பிட்ட ஒரு சில பாசுரங்களை அடிப்படையாகக் கொண்டு "ஆசாரிய ஹிருதயம் என்னும் நூல் இத்தலத்து எம்பெரு மானிடம் செய்ந்நன்றி அறிதல்' என்னும் குணம் சிறந்து விளங்கும் என்று குறிப்பிடுகின்றது. 'ஸ்ாத்ய ஹ்ருதிஸ்தனாயும் ஸ்ாதநம் ஒருக்கடுக்கும் கிருதஜ்ளுதா கந்தம், தாயப் பதியிலே’** என்பது சூத்திரம். தாயப்பதி" என்றது," திருக்கடித் தானத்தை 'திருக்கடித்தான நகரும் தன தாயப்பஇயே: என்ற பாசாப் பகுதியைத் திருவுள்ளம் பற்றி இங்கம்ை கதம் பெற்றது. கிருதஜ்குதா கந்தம் என்றது செய்ந்நன்றி யறிதலாகிய மணம். கடித்தானம் என்பதற்கு மணத்தை 23. திருவாய், 8.6:9 24. ஆசாஹிரு. 175 25 திருவாய் 8.6 : 8