பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கடித்தானத்து உறை திருமால் } யுடைய இடம் என்பது பொருள். இந்தக் குணம் ஸ்ாத்ய ஹருதிஸ்தனாயும் ஸாதநம் ஒருக்கடுக்கும் என்ற தொடர்ால் விளக்கப் பெறுகின்றது. லாத்ய ஹ்ருதிஸ்தனாயும்-ஆழ்வாரு டைய மனத்தில் வசித்தலாகிய பலன் கிடைத்திருக்கச் செய் தேயும். ஸாத்யம்பலன்; பேறு. ஸாதநம்-கருவி; ஆழ்வாரு டைய மனத்தில் மன்னி வசிப்பதற்குச் சாதனமாக இருந்த திவ்விய தேசம், ஒருக்கடுத்தல்-மனத்தில் வசிப்பதைப் போலவே திவ்விய தேசத்திலும் ஆசை கொண்டு வசித்தல். ஒருங்க அடுத்தில் ஒருக்கடுத்தல். ஆழ்வார் திருவுள்ளத்தில் வசித்தலாகின்ற பலனைப் பெறுவதற்காகவே எம்பெருமான் திருக்கடித்தானத்தில் எழுந்தருளியிருத்தலாகிற சாதனத்தை மேற் கொண்டான். அங்ங்னமே பெற்றான்; ஆனால் திருக் கடித்தானத்தில் எழுந்தருளியிருத்தலில் விருப்பம் குறைந் திலன். 'திருக்கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக் கடுத்துள்ளே றையும் பிரான் கண்டீர்' என்கின்றார் ஆழ்வார். சாத்யத்தைப்பெற்ற பின்பும் சாதனப் பொருளில் விருப்பம் வைப்பது மிகச் சிறந்த செய்ந்நன்றியறிதல் அன்றோ? ஆகவே, இத் திருப்பதியில் இறைவனின் *கிருதஜ்ளுதை” என்ற குணம் விளங்கலாயிற்று. அடுத்து, தம்மைப் பெறுமளவும் எம்பெருமான் திருக்கடித்தானத்தில் நின்றருளினான் என்றும், தம்மைப் பெற்றுக் கலந்து பரிமாறின. பிறகு நிற்பதும் இருப்பதும் தன் நெஞ்சிலே ஆயிற்று என்றும் கூறுகின்றார் ஆழ்வார். அற்புதன் நாராயணன்அரி வாமனன். நிற்பதும் மேவி யிருப்பதுஎன் நெஞ்சகம் நற்புகழ் வேதியர் நான்ம்ன்ற நின்று அதிர், கற்ப்கச் சோலைத் திருக்கடித் தானமே” 26. திருவாய் 8.6 : 2 27. டிெ 8.6: 10