பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}{32 மலைநாட்டுத் திருப்பதிகள் (மேவி - பொருந்தி; அதிர்தல் - முழங்குதல்.) என்பது பாசுரம். நாராயணன் என்பதால் தன் உடை மையை விட்டுக் கொடாத அன்பையுடையவன் (வத்சலன்)" என்பதும், அரி என்பதால் அடியார்களின் விரோதிகளை அழிக்கின்ற ஆற்றலையுடையவன் என்பதும், வாமனன் என்பதால் தன்னைச்சிறுக விட்டு அடியார்களுடைய விருப்பங்கள் அனைத்தையும் முடிக்குமவன் என்பதும், அற்புதன் என்பதால், மேற்கூடிய படிகளாலே ஆச்சரி யத்தை யுடையவன் என்பதும் பெறப்படுகின்றன. இவ் விடத்தில் திருமழிசையாழ்வாரின் 'நின்றது எந்தை ஊரகத்து இருந்தது.எந்தை பாடகத்து, அன்றுவெஃக ணைக்கிடந்தது என்னிலாத முன்னெலாம்’** என்ற பாசுர பகுதியும், "நிற்பதும்ஒர் வெற்பகத்தில் இருப்பும்விண்கி டப்பதும் நற்பெருந்தி ரைக்கடலுள் நானிலாத முன்னெலாம்: என்ற பாசுரப் பகுதியும் சிந்தித்தல் தகும். இநத எண்ணங்கள் நம் மனத்தில் அலைபாயத் திருக் கோயிலினுள் நுழைகின்றோம். நின்ற z திருக்கோலத்தில் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு கற்பகவல்லித் தாயாருடன் சேவை சாதிக்கும் அற்புத நாராயணனைக் கண்டு இ! ணங்குகின்ேறாம். அவன் சந்நிதியிலேயே 28. திருச்சந் விரு 64. 29, Q్క ధ5,