பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கடித்தானத்து உறை திருமால் #03 ’பாலோடமுதன்ன ஆயிரத்தில் இப்பத்து முழுவதை யும் அதுசந்தித்து அகங்கரைகின்றோம். மேலை வைகுந் தத்து இருத்தும் வியந்தே' என்ற பெருமித உணர்ச்சி நம்மிடையே எழுதலை அறிகின்றோம். மேலும், பாலோ டமுதன்ன என்பதற்கு ஆளவந்தார் அருளிய பொருளைச் சிந்தித்து மகிழ்கின்றோம். பால்' என்பது சோலைத் திருக் கடித்தானத்து உறை திருமாலைக் குறிக்கின்றது என்பதும், அமுது" என்பது சடகோபன் சொல்’ என்ற வாசகத்தைக் குறிக்கின்றது என்பதும் அவர் கூறிய கருத்தாகும். இந்த வாச்சிய வாசகங்களின் சேர்த்தியை" வியந்தவண்ணம், காண விரும்பும் என்கண்; கையும் தொழவிரும்பும்; பூண விரும்பும் என்தன் தன்தலைதான்-வாணன் திருக்குஅடித்தான் நத்தான் திகிரியான் தண்டான் திருக்கடித்தா னத்தானைச் சென்று' (புன்தலை - அற்புதமான சிரசு, திருக்கு-மாறுபாடு: அகங்கார ம்மகாரங்கள்.) என்ற திவ்விய கவி பிள்ளைப்பெருமாள் அய்யங்காரின் பாடலையும் நினைவுகூர்ந்து அப்பாடலையும் ஒதுகின்ேறாம். பக்தி உணர்ச்சி பொங்கி வழிகின்ற நிலையில் திருக்கோயில் பிரசாதங்களைந் பெற்று நம் இருப்பிடத்திற்குத் திரும்பச் சித்தமாகின்றோம். . - 30. திருவாய் 8 11 31. டிெ 8.6 : 11 - - - - - 32. வாச்சியம் - சொற்களின் பொருள்; வாசகம் - சொற்கள். - 33. நூற். திருப். அந்தாதி 70