பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. திருவல்லவாழ் உறையும் கோனார் மேது சமய நூல்கள் அன்பைப் பக்தி' எனவும், காதலைப் பிரேமம் எனவும் பிரித்துப் பேசுகின்றன. பக்தியைக் காட்டிலும் பிரேமமே சிறந்தது. இப் பிரேமம் என்னும் காதலின் இலக்கணத்தை வெளியிட எழுந்த இலக்கணங்களும் இலக்கியங்களும் பலப்பல. இத்துணை உயரியதும், தூயதுமான காதல் இவ்வுலக மக்களிடையே நிகழ்தல் அரிதாகும் என்றும், தெய்வத் தன்மை வாய்ந்த நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற சீரியோரிடையேதான் இஃது அரும்பா நிற்கும் என்றும் அறிஞர்கள் கூறுவர். பரம்பொருளுக்கு ஆன்மாவிற்கும் ஒன்பது வகையான தொடர்புகள் ஏற்பட்டுள்ளன என்று வைணவ தத்துவம் கூறுகின்றது. அவற்றுள் தாயக. நாயகி பாவனை'யும் (தலைவன் தலைவி உறவு) ஒன்றாகும். இந்த உறவே ஏனையவற்றுள் சிறந்தது; உயிராயது. இந்த முறையில் பர்மான்மாவைத் தலைவனாகவும் சீவான்மாவைத் தலைவி. யாகவும் வைத்து விளக்கும் பாடல்களைத் தேவாரத்திலும் நாலாயிரத்திலும் காணலாம். புருடோத்தமனாகிய எம் பெருமானது பேராண்மைக்கு முன்னர், உலகிலுள்ள் ஆன் மண்க்கள் யாவும் பெண் தன்ம்ையை அடைந்து நிற்கும். எனவே, ஆழ்வார்கள், குறிப்பாக நம்மாழ்வாரும் திருமங்கை தாழ்வாரும் , பெண் தன்மைய்ை எய்திப் பல திருக்கோயில்