பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவல்லவாழ் உறையும் கோனார் iO5 மூர்த்திகளை அதுபவித்ததை அவரவர்களுடைய பாசுரங் களில் காணலாம். தண்டகாரண்ய முனிவர்கள் இராமபிரானது பேரழகில் ஈடுபட்டுப் பெண்மையை விரும்பி மற்றொரு பிறப்பில் ஆயர் மங்கையர்களாகிக் கண்ணனைக் கூடினர் என்ற வழக்கு ஒன்றுண்டு. ஆனால் ஆழ்வார்கள் அப்படியின்றி அப்போதே பெண்மை நிலையை அடைந்து எம்பெருமானாகிய புருடோத்தமனை அநுபவிக்கக் கா த லி க் கி ன் ற ன ர். நம்மாழ்வார் போன்றவர்களிடத்தில் சில சமயம் ஞானம் தலைதுாக்கி நிற்கும்; சில சமயம் பிரேமம் மீதுளர்ந்து நிற்கும். இந்த இரண்டு நிலைகளி லிருக்கும்பொழுதும் அவர்கள் பாசுரங்கள் அருளியுள்ளனர். இதனை, ஞானத்தில் தம்பேச்சு; பிரேமத்தில் பெண்பேச்சு' என்று ஆசாரிய ஹிருதயம் குறிப்பிடும். அஃதாவது, ஞான நிலையிலிருக்கும்பொழுது தாமான தன்மையிலே நின்று பேசுவர்; பிரேம நிலையில் பெண்தன்மையை அடைந்து பெண் பேச்சாகப் பேசுவர். அப்போது ஆழ்வாருக்குப் 'பராங்குசர் என்ற ஆண்மைப் பெயர் நீங்கி பராங்குச நாயகி என்ற பெண்மைப் பெயர் வழங்கப் பெற்று வரும். இங்ங்னம் ஆழ்வார்கள் பெண்மை நிலையில் இருந்து எம்பெருமானை அநுபவிக்கும்பொழுது அவர்கள் தாய்: தோழி, தலைவி என்ற இம்மூவருள் ஒருவரின் தன்மையைத் தாம் அடைந்து கூற்றுகள் நிகழ்த்துவர். இதன் காரணமாகப் பாசுரங்களும், தாய் சொல்வதுபோல வடிவெடுத்துத் தாய்ப் பாசுரம் என்றும், தோழி சொல்வதுபோல உருக்கொண்டு தோழிப் பாசுரம் என்றும், தலைவிபேசுவதுபோால் வடிவங் 1. ஆசாஹிரு-118