பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jū6 - மலைநாட்டுத் திருப்பதிகள் கொண்டு மகள் பாசுரம் என்றும் பெயர்களைப் பெறும். இங்கனம் மூன்று வகையாகக் கூற்றுகள் நிகழ்ந்து பாசுரங்கள் வெளி வந்தாலும் பாசுரம் பேசுகின்றவர்கள் ஆழ்வார்களே யாவர். ஒர் ஆறானது பல வாய்க்கால்களாகப் பெருகி னாலும் அவற்றுக்கு முக்கியமான பெயர் ஒன்றேயாக இருக்கும் என்பதை நாம் அறிவோம். அங்ங்னமே, ஆழ்வார் களது சொல் மாலைகள் மூன்று நிலைமைகளாக வழிந்து புறப்பட்டாலும், அவை ஆழ்வார்களது பாசுரங்களாகவே தலைக்கட்டி நிற்கும். இங்ங்னம் மூன்று நிலைகளாக வடிவெடுக்கும் பாசுரங்கட்கும் ஆசாரிய ஹிருதயம் தத்துவம் குறிப்பிடுகின்றது. அதனை அந்நூல் நோக்கி அறியலாம். இந்த எண்ணங்கள் நம் மனத்தில் குமிழியிட்ட வண்ணம் திருவல்லவாழ் என்ற திருப்பதிக்குப் புறப்படத் தயாரா கின்றோம். கோட்டயத்தில் அதிகாலையில் - நீராடித் துரய ஆடையை உடுத்திக் கொண்டு இருப்பூர்தி நிலையத்திற்கு வருகின்றோம். வண்டி காலை சுமார் ஏழரை மணிக்குப் புறப்படுகின்றது. அதில் ஏறி முக்கால் மணி நேரத்திற்குள் திருவல்லவாழ் என்ற நிலையத்தை அடைகின்றோம். நிலையத்திலிருந்து திருக்கோயிலுக்கு நடந்தே செல்லு கின்றோம். இயற்கைச் சூழல் நிறைந்த ஊராதலால் பாதை யின் இருமருங்கும் காணப்பெறும் இயற்கைக் காட்சிகளைத் துய்த்தவண்ணம் திருக்கோயிலை நோக்கி வருகின்றோம். இத்திருக்கோயில் எம்பெருமானை நம்மாழ்வார் ஒரு திருவாய் மொழியாலும், திருமங்கையாழ்வார் ஒரு திருமொழி யாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர். இந்த இரு 2. ஆசா ஹிரு- 133 3. திருவாய் 5.9 4. பெரி. திரு 9.7