பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

##5 மலைநாட்டுத் திருப்பதிகள் என்ற சொல்லாலும் வழங்கிவருகின்றனர்! மேலும், இவ் வுடலைத் தவிர ஆன்மா’ என்பதொன்றில்லை என்றும் பிதற்றுகின்றனர் சில பேயர்கள். இந்த வீனுரைகளின்மீது கருத்தைச் செலுத்தாது திருவல்லவாழ் சென்று உய்க’ என்று நெஞ்சினுக்கு அறிவுறுத்துகின்றார். மேலும், ஐந்து ஆதங்களாலும் ஆன இவ்வுடல் புகலிடம் அன்று ஆன்மாவை கொண்டே நாம் கடைத்தேற வேண்டும் என்று கருதினா யாகில் திருவல்லவாழ் செல்வாயாக' என்கின்றார். இந்த எண்ணங்கள் நம் மனத்தில் எழுந்த வண்ணம் நடந்து செல்லுங்கால் இயற்கைக் காட்சிகள் நம் கண்களை யும் கருத்தினையும் கவர்கின்றன. அவை மண்டிக் கிடக்கும் திருவல்லவாழ் என்ற திருப்பதிக்கே வந்துவிடுகின்றோம். பராங்குச நாயகியின் வாக்கும் தம் நினைவிற்கு வருகின்றது. மானேய் நோக்கு நல்வீர்! வைகலும் வினை பேன்மெலிய வான்ார் வண்கமுகும் மதுமல்விகை யும்கமழும் தேனார் சோலைகள் சூழ் திருவல்ல வாழ்உறையும் கோனாரை, அடியேன் அடிகூடுவ(து) என்றுகொலோ?' (மான்ஏய் மான் போன்ற வைகலும் - நாள்தோறும்; மெலிய - இளைக்கும்படி; மது - தேன்: தேன்.ஆர் - தேன் திரம்பிய.) - 13. பெரி. திரு 9.7:1 14. திருவாய் 5.9 ; 1.