பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவல்லவாழ் உறையும் கோனார் {1} என்பது அவர் வாக்கு. ஆகாயம் வரையிலும் உயர்ந் திருக்கும் வளப்பமுடைய பாக்கு மரங்களும், தேன் பொருந்திய ம்ல்லிகையும், வாசனை வீசுகின்ற சோலைகளும் சூழ்ந்திருக்கும் இடம் திருவல்லவாழ் என்ற திருப்பதி. தான் மெலிவதற்காகவே கழுகுகள் வானத்தைக் கண்செறி இட்டாற்போல் (கயளிகரித்தல் போல்) இருக்கின்றன என்பது பராங்குச நாயகியின் நினைப்பு. தான் இருக்கின்ற இடம் மரங்கள் யாவும் உலர்ந்து விட்டன என்னும்படி யாகவும், அலன் (எம்பெருமான்) இருக்கும் இடம் காலம் அல்லாத காலத்திலும் மரங்கள் பலனைக் கொடுக்கக் கூடியனவாகவும் இருக்கும்’ என்றும் எண்ணுகின்றாள். இருவராய்க் கொண்டு பரிமாற வேண்டும் தேசத்தில் தனியே நிற்கின்றான் காண் என்பது போன்ற தேனார் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும் கோனாரை என்று குறிப் பிடுகின்றாள். மேற்குறிப்பிட்ட பொருளைச் சிந்தித்த நிலையில் 'கோனாரை அடியேன் அடிகூடுவது என்று கொலோ?” என்ற அடிக்கு ஈட்டின் ஆசிரியர் நம்பிள்ளை கூறும் மெய்ப் பொருள் நம் சிந்தையில் எழுகின்றது. 'நாராயண சப்தத் திலும் பிரணவத்திலும் போலே கோனாரை அடியேன்” என்கின்றாள். அவனைச் சொல்லும்போது தம்மை யிட்டல்லது சொல்லப்போகாது; தம்மைச் சொல்லும் போதும் அவனையிட்டல்லது சொல்லப் போகாது. கோனாரை என்ற இடம் நாராயண சப்தார்த்தம்; அடி யேன்” என்ற இடம், பிரணவார்த்தம். பிரணவம், ஜீவப் பிரதானம்; நாராயண பதம் ஈசுவரப் பிரதானம். அடி கூடுவது என்று கொலோ?’ என்ற இடம் நான்காம் வேற்றுமையின் பொருள் (சதுர்த்தி). என்று கொலோ’