பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}}2. மலைநாட்டுத் திருப்பதிகள் என்று பிரார்த்தனையோடு தலைக்கட்டுகின்றதன்றோ? ) அடுத்து ஒவ்வொரு பாசுரத்திலும் கூறப்பெற்றுள்ள இயற்கைச் சூழலை நினைவுகொள்ளுகின்றோம். இயற்கை என்பதுவும் ஈசுவரனின் படைப்பே யன்றோ? இதனா வன்றோ நம்மாழ்வார் பிறிதோரிடத்தில் திருவேங்கட மாமலை, ஒன்றுமே தொழ நம்வினை ஒயுமே' மதி தவழ் குடுமி மாலிருஞ் சோலைப், பதியது ஏத்தி எழுவது பயனே” என்றும் கூறியுள்ளனவற்றை எண்ணிப் பார்க் கின்றோம். இவர் (நம்மாழ்வார்) இவ்வாற்றாமையோடு இருந்து சோலையைக் கவிபாடுகிறது, உள்ளே நிற்கின்ற எம்பெருமானைப் போன்று இவையும் இனிய பொருளாக இருக்கையால் அன்றோ? மனத்தினை உள்முகமாக்கி அதுபவிக்க மாட்டாதார்க்கு, தன்னை அவர்கள் கண்களுக்கு இலக்காக்கிக் கொண்டு உபாயவஸ்து நிற்கிறாப் போலே காணும் இவையும்? யாவர்க்கும் தொழு குலமான சர்வேசு வரனுடைய உபாய பாவனையில் நிலை போலே, நித்திய பிராப்பியனாகக் (அடையத் தக்கவனாகக்) கொண்டு அங்கே இருக்கிறவன், அடியார்கள் உகந்தது ஒரு பொருளைத் திருமேனியாகக் கொண்டு முகங் கொடுத்துக் கொண்டு நிற்பது போலே, அங்குள்ளாரும் இங்கே போந்து தாவரங் 15. ஈட்டின் தமிழாக்கம்-திருவால் 5. 9: 1. ஈடுகோண்க பிரணவம் சேதனனுடைய சேஷத்துவத்தையும் (சேதநன்) பரமான்மாவுக்கே அடிமையாக இருக்கும் தன்மை) நாராயணபதம் ஈசுவரனுடைய தன்னேரில்லாத் தன்மைய்ை யும், நான்காம் வேற்றுமையின் பொருள் சேதநன் ஈசுவரனுக்கு எல்லாத் தொண்டுகளையும் புரிய விரும்ப வேண்டும் என்பதையும் குறிக்கின்றன. (இவற்றின் விவரங் களை முழுட்சுப்படி போன்ற நூல்களை நோக்கி அறிக.) 16. திருவாய் 3.3 : 8. t?. ഒു. 210:2.