பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#18 மலைநாட்டுத் திருப்பதிகள் இந்த எண்ண அலைகள் நம் சிந்தையில் எழுந்த வண்ணம் திருவல்லவாழிலுள்ள திருக்கோயிலை அடை கின்றோம். திருக்கோயில் விசாலமான இடப்பரப்பில் அமைந்துள்ளது. பக்தி கிளர்ந்தெழுந்த நிலையில் திருக் கோயிலினுள் நுழைகின்றோம். நின்ற திருக்கோலத்தில் கிழக்குத்திசை நோக்கித் திருமுக மண்டலங் கொண்டு எழுந் தருளியிருக்கும் கோலப்பிரானையும், செல்வத்திருக் கொழுந்து காச்சியாரையும் சேவிக்கின்றோம். திருமங்கையாழ்வார் பாசுரங்களையும் சந்நிதியிலேயே அன்புருகப் பாடி என்பு கரையப்பெறுகின்றோம். 'நாமங்களாயிரமுடைய நம் பெருமான்' மீதுள்ள பாசுரங்களை ஒதியதும், இப்பூத உடல் இந்த லீலா விபூதியிலிருந்தாலும், இந்த பகவத நுபவத்தின் காரணமாகச் சிரியரானோம்’ என்ற உணர்வுடன் செம்மாந்து நிற்கின்றோம். இந்நிலையில் திவ்வியகவி பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் அவர்களின் பாசுரம் நினைவுக்குவர, அதனையும் ஓதி உளங்கரைகின்றோம். 'உகந்தார்க்கு எஞ்ஞான்றும் உளன் ஆய், உகவாது இகந்தார்க்கு எஞ்ஞான்றும் இலன்ஆய், திகழ்ந்திட்டு, அருஅல்ல, வாழ்உருவம் அல்ல,என நின்றான் திருவல்ல வாழ்உறையும் தே’** (உகந்தார்.விரும்பினவர்; இகழ்ந்தார்-விரும்பாதவர்; அரு-உருவம் அல்லாதது; வாழ் உருவம் அல்ல. அர்ச்சையாக; தே-தேவன்.) 31. நூற் திருப். அந்தாதி, 56,