பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவல்லவாழ் உறையும் கோனார் 117 என்பது பாசுரப் பகுதி. கரும்புகள் எப்போதும் ஆடு கையிலே உற்றிருக்கை,செந்நெலும் எப்போதும் அறுக்கைக்குப் பக்குவமாய் விளைந்து கிடக்கை என்றது, அங்குள்ளவை முழுவதும் பக்குவமாய்க் காணும் இருப்பது” என்ற ஈட்டின் பகுதி சிந்திக்கத் தக்கது. இதனால் பெறப்படுவது யாதெனில் "நாம் அங்குச் சேர்தலே தாமதம், அவன் நம்மை அதுபவிப் பான்’ என்பது பராங்குச நாயகியின் நினைப்பு. நம்மாழ்வார் வாழ்ந்த காலத்தில் எண்ணற்ற அந்த ணர்கள் திருவல்லவாழில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் பாடுகின்ற சிறந்த வேதங்களின் ஒலி கடலில் அலைகள் முழங்குவனபோல் முழங்குகின்றன. உயர்ந்து எழும் ஒமப் புகையோ எங்கும் சூழ்ந்து கமழ்கின்றன. கடல் ஒலிக்குக் காலத்தாலே இடையீடு உண்டு. வேதங்கள் முழங்குவதற்கு ஒய்வே இல்லை. யாகத்தினின்றும் கிளம்பும் ஒமப்புகை ஆகாயத்தளவன்றியே உயர்ந்த சுவர்க்க லோகத்தையும் மறைக்கும். 'நல்ல அந்தணர் வேள்விப் புகை, மைந்நலம் கொண்டுயர் விண்மறைக்கும் தண் திருவல்லவாழ்' என். பதனால் இதனை அறியலாம். இத்தகைய திருப்பதியில் கோலங்கொண்டு எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைக் காணும் அவாவுடன் துடித்து நிற்கின்றாள் பராங்குசநாயகி. 'கன்னலங் கட்டி தன்னைக் கனியை இன் அமுதந்தன்னை என்னலம் கொள்சுடரை என்றுகொல் கண்கள் காண்பதுவே' (கன்னல்-கரும்பு, சருக்கரை! என்ற பாசுரப் பகுதியால் இத்துடிப்பினை அறியலாம். 28. திருவாய் 5. 9; 3 29. டிெ 5. 9: 5 30. டிை 5, 9, 5