பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

##6 . மலைநாட்டுத் திருப்பதிகள் மேலும், அந்தத் திவ்விய தேசத்தைச் கற்றிலும் கடல் போன்ற பல பெரிய தடாகங்கள் சூழ்ந்துள்ளன. அவற்றில் வளர்ந்து கிடக்கும் தாமரைப் பூக்கள் மாதர்களின் அழகிய முகங்களை ஒத்துள்ளன; அப்பொய்கைகளில் மண்டிக் கிடக்கும் செங்கழுநீர்ப் பூக்கள் அவர்களின் கண்களைப் போல் விளங்குகின்றன. 'ஒதறிெ டுந்தடத்துள் உயர்தாமரை செங்கழுநீர், மாதர்கள் வாண்முகமும் கண்ணும்ஏந்தும் திருவல்லவாழ்’’’ ஒதம் - கடல்; தடம் - பொய்கை; வாள்முகம் - ஒளி பொருந்திய முகம்). - என்ற பாசுரப் பகுதியைச் காண்மின். இந்த மலர்கள் அங்கு உறையும் ஞாலம் உண்ட நம்பிரானின் திருவடிகளில் சாத்தப்பெறுபவை. அவற்றையாகிலும் சேவிக்கப் பெறு. வோமோ என்று தனது பேரவாவினைத் தெரிவிக்கின்றாள் பராங்குச நாயகி. பாதங்கள் மேலணி பூந்தொழக்கூடுங் கொல்?" என்று கூறுவதைக் காண்மின். . தடாகங்கள் ஊரினைச் சூழ்ந்துள்ளன என்பதை மேலே கண்டோம். அங்ஙனமே கரும்பும் செந்நெலும் நிறைந்த வயல்கள் தடாகங்களைச் சூழ்ந்திருக்கின்றன. 'ஆடுறு தீங்கரும்பும் - விளைசெந்நெலும் ஆகிஎங்கும் மாறுே பூந்தடஞ்சேர் வயல்குழ்தண் திருவல்லவாழ்க! ஆடுது ஆலையிலிட்டு ஆடுதற்குரிய திம்கரும்பு இனிமையான கரும்பு மாடுவது - பக்கங்களில் நெருங்கிய 26. திருவாய் 5, 9 : 7 . 27. டிெ 5, 9 : 8