பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவல்லவாழ் உறையும் கோனார் 115 மலர்களிலுள்ள மதுவினைப் பருகி இது வேனுகானமோ? அல்லது வீணையினின்றெழுந்த இசையோ?” என்று ஐயுறு மாறு இசை பாடிக் களிக்கின்றன. குழல்என்ன யாழும் என்னக் குளிர்சோலையுள் தேன் அருந்தி மழலைவ ரிவண்டுகள் இசைபாடும் திருவல்லவாழ்' (குழல் - புல்லாங்குழல் யாழ் இசைக் கருவி, மழலை. இளமை, வரி - கீற்று; வண்டுகளின் உடலில் காணப்படுவது). என்ற பாசுரப் பகுதியால் இதனை அறியலாம். இவ்விடத்தில் ஈடு : செருக்கருமாய் சுகுமாரமாயிருப்பார் மரம் என்று சந்தனத்தைக் கழித்துப் புழுகு நெய்யை ஏறிட்டுக் கொண்டு திரியுமாறு போலே, இவையும் இயலைவிட்டு இசையையே பாடுகின்றன வாகலின் இசை பாடும், என்கிறது' என்பது. திருவல்லவாழ் என்ற ஊர் சிரமம் நீங்கும்படியான சோலைகள் சூழ்ந்த ஊர். அந்த ஊரிலுள்ள மாட கூடங்களின் மீது பசுமை மாறாத இலைகளையுடைத்தான கமுகமரங்கள் கவிந்து நிற்கின்றன. அங்ங்னமே பலாமரங்களும், தென்னை மரங்களும், வாழைகளும் அம்மாடங்கட்கு நிழல் செய்வன போல அவற்றின்மீது அணவி நிற்கின்றன. இதனை, பச்சிலை நீள்கமுகும் பலவும்தெங்கும் வாழைகளும் மச்சணி மாடங்கள் மீ(து) அணவும்தண் திருவல்லவாழ்கை (கமுகு - பாக்குமரம் பலவு - பலாமரம், தெங்கு . தென்னைமரம்; மச்சு - மேல்தளம்; அணவும் . பொருந்தும்). என்ற பாசுரப் பகுதியால் அறியலாம். 24 திருவாய் 5.9, 9 25. ழெ, 5 9 : 4