பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Hiá மலைநாட்டுத் திருப்பதிகள் சுகுமாரரைப் போலே காணும் தென்றலின் சுபாவம் என்பாள் பொன்திகழ் புன்னைமகிழ் புது மாதவி மீதணவித் தென்றல் மணம் கமழும் என்கிறாள். இதனால், பூவில் பரிமளத்தைத் தேடுவாரைப்போலே கானும் இது பரிமளத்தில் கலம்பகன்' தேடுகிறபடி என்பதைத் தெரிவித்தபடி. செருக்கராயிருக்கும் இராஜ புத்திரர்கள் முலைசரித்தாரைப் போகத்திற்குத் தகுதியுள்ளவரல்லர் என்று கழிக்குமாறு போன்று, கழிய அலர்ந்தவற்றைப் பாராமல் போகுகிறது என்பாள், * புதுமாதவி மீதணவி என்கின்றாள்”.* அன்றியும், வண்டின் இசைஞபமான மிடற்றோசை இளந் தென்றலுடன் கலந்து எம்பிரான் வாழும் சூழ்நிலையையே இனிதாக்குகின்றது. மரங்கள் கவடுகளாய்ப் பணைத்து அவன் வாழும் இடத்தையே சுற்றி மூடிக்கொண்டிருப்பது அச்சூழ்நிலையைப் பின்னும் அழகாக்குகின்றது. இதனை, பாண்குரல் வண்டினோடு பசுந்தென்றலும் ஆகிளங்கும் சேண்சினை யோங்குமரச் செழுங்கானல் திருவல்லவாழ்’’’ (பாண்குரல் - பண் என்பது பாண் என வந்தது. பாண் - இசை, பசுந்தென்றல் இளந்தென்றல்; சேண் - மிகவும்; சினை - கிளை செழுங்கானல் - வளப்பம் பொருந்திய கடற் கரைச் சோலை.) என்ற பாசுரப்பகுதி தெரிவிக்கின்றது. வண்டுகளின் சிங்காரத்தைப்பற்றி இன்னொரு பாசுரத்தாலும் அறி இன்றோம். அவை குளிர் சோலைகளில் மண்டிக் கிடக்கும் 21. பரிமளத்தில் கலம்பகன். பலவிதமான் பரிமளத்தின் கூட்டம். 22. ஈட்டின் தமிழாக்கம் - திருவாய் 5, 9 : 2 23. திருவாய் 5.9 : 6 سپاہی مسببب متبہ۔