பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix விட்டு உயிர் துறந்தேனோ? அல்லது, அநுமனைப் போல் கண்டனன் கற்பினுக் கணியை’ என்ற முழக்கத்தோடு வந்து, பெருமானின் துயரத்தைத் தீர்த்தேனோ? அல்லது, வேறு என்ன உதவிதான் செய்தேனோ? அறியேன். ஆனால், அவன் என் நெஞ்சத்துள் புகுந்து அருள் செய்து விட்டான்' என்று தான் செய்த நன்றியைப் பாராட்டுகின்றாராம் ஆழ்வார். இப்படியெல்லாம் இறைவனோடு ஊடாடித் திளைப் பதற்கு வழி செய்திருக்கின்றார்கள் நம் முன்னோர்கள் அந்த வழியிலே நம்மை நடத்திச் செல்லுகிறது இந்நூல். ஒன்றினோடு ஒன்றொவ்வாப் பல துறைகளிலும் பாண்டித்தியம் பெற்றவர் டாக்டர் சுப்பு ரெட்டியார். அவருடைய விரிந்த படிப்பைக் கண்டு நான் அஞ்சிய காலம் ஒன்றுண்டு. பல ஆண்டுகளுக்கு முன் அவரைக் காரைக் குடியில் சந்தித்தபோது, எதற்காக நீங்கள் இவ்வளவு படிக்கின்றீர்கள்? கொஞ்சம் படிப்பைக் குறைத்துக் கொண் டால் நலமாயிருக்கும்.’’ என்று அவரிடம் சொன்னேன், மித மிஞ்சிய படிப்பு கவனத்தைச் சிதறடித்து விடுமே என்ற அச்சத்தால் அவ்வாறு சொன்னேன். ஆனால், இந்நூலைப் படித்த பிறகு என்னுடைய அச்சம் மறைந்துவிட்டது. ஆசிரியரின் பிடிக்குள் அடங்காத படிப்பு, பக்தியென்ற சூரிய காந்தக் கல்லில் புகுந்து ஒருமையும் பயனும் பெற்று விட்டது. வாழ்க "மலைநாட்டுத் திருப்பதிகள்!”