பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ឲ្យ அர்ச்சாவதாரத்தை அநுபவிக்கக் கொடுத்து வைக்காத வர்கள் வானவர்கள். ஆகவே, வான நாட்டைத் துறந்து மண்ணுலகத்தில் வந்து பிறக்க விரும்புகிறார்கள் அவர்கள், "இங்குள்ளார் அங்குப் போவது மேன்மையை அநுபவிக்க, அங்குள்ளார் இங்கு வருவது சில கு ண ா து ப வ ம் பண்ணுகைக்கு' என்ற ஈட்டின் வாசகத்தை மேற்கோள் காட்டி இவ்வுண்மையை விளக்குகின்றார் ஆசிரியர். எம்பெருமானுக்கு விண்ணுலகச் சூழ்நிலையில் அவ்வளவு அழகு இருப்பதில்லையாம். மண்ணுலகச் சூழ்நிலையிலேயே அவனுடைய அழகு சோபிக்கிறதாம். ஏன்? வானவர் நாடு ஞானஒளி வீக்ம் நாடு, ஆகையால், அங்கிருக்கும் எம்பெருமான், பகல் விளக்குப்போல், ஒளி குன்றிக் காணப் படுகிறான். ஆனால், அஞ்ஞான இருள் சூழ்ந்த தம் மண் ணுலகத்திலோ, அவன் இருட்டறை விளக்குப்போல, திவ்ய ஒளி வீசி மிளிர்கின்றானாம். ஆகவே, பேரொளியை அநுபவிப்பதற்கு மண்ணுலக இருட்டும் தேவைப்படுகின்றது என்றே தோன்றுகின்றது. இல்லையேல், மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே' என்று அப்பர் அடிகள் சொல்லியிருப்பாரா! புறத்தே நின்ற பேரொலியைக் கொண்டாடக் கொண் டாட, அது ஆழ்வார் அகத்திலும் குடியேறிவிடுகின்றது. குடியேறிய திருவடிகளிலுள்ள துளவம் ஆழ்வார் உள்ளத்தை நிறைத்து, ஆழ்வாருடைய மெய்யெலாம் கமழச் செய் கின்றது.இந்த நிலையில், . ‘எங்கன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே' என்று வியந்து ஓலமிடுகின்றார் ஆழ்வார். இந்த வியப்புக்கு விளக்கம் கொடுக்கின்றது ஈடு. எப்படி? சடாயுவைப் போல் பிராட்டி சென்ற திசையை எம்பெருமானுக்குக் காட்டி