பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. திருவண்வண்டுர் தேவாதிதேவன் வேதாந்தங்களில் குறிப்பிடப்பெறும் பக்தி ஆழ்வார் களிடம் காதல் முறையில் பரிணமித்து நிற்கும். இவர்கள் எம்பெருமான்மீது கொள்ளும் காமம் பகவத் விஷயகாமம்’ என்று வழங்கப்பெறும். இங்ங்னம் மாதவன்மீது இவர்கள் கொள்ளும்காமம் மங்கையர்மீது கொள்ளும் காமத்தினின்றும் வேறுபட்டது.ஆயினும் சிற்றின்ப அநுபவமாகிய காதலுக்குக் கூறப்பெறும் அகப்பொருள் துறைகள் யாவும் இந்த பகவத் விஷய காமத்திற்கும் கூறப்பெறும், சிற்றின்ப அநுபவத் திற்குக் கொங்கை முதலியன சாதனமாயிருப்பது போல, பகவத் விஷயா துபவத்திற்குப் பரபக்தி, பரஞானம் பரம பக்தி இவை இன்றியமையாதனவாக இருப்பதால் அவையே கொங்கை முதலான சொற்களால் இவ்வாழ்வார்களின் அருளிச் செயல்களில் கூறப்பெறுகின்றன என்று ஆன்றோர் கொள்வர். காதல் சுவையின் சம்பந்தம் சிறிதுமின்றியே பக்திச் சுவையின் அடிப்படையாகவே பாசுரங்கள் அருளிச் செய்தல் கூடும். அங்ங்ணமிருக்ககாதல் சுவையுையம் கலந்து பாசுரங்கள் அருளிச் செய்யப்பெற்றிருப்பதற்குக் காரணம் என்ன? உடல் நலத்திற்குக் காரணமாகிய வேப்பிலை யுருண்டையை உட் கொள்ள வேண்டியவர்கட்கு வெல்லத்தை வெளியிற் பூசிக் கொடுத்து உண்பிப்பது போலவும், கொயினா மாத்திரை கட் குச் சர்க்கரைப் பாகு பூசி இனிப்புப் சுவையை