பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவண்வண்டுர் தேவாதிதேவன் 121 உண்டாக்கித் தின்பிப்பது போலவும் சிற்றின்பம் கூறும் வகையால் பேரின்பத்தை நிலை நாட்டுகின்றனர் என்று பெரியோர்கள் கூறுவர். இது கடையாய காமத்தினையுடை வர்கட்குக் காட்டப் பெறும் உக்தி முறையாக இறையனார் களவியலிலும் கூறப்பெற்றுள்ளமை ஈண்டு சிந்திக்கத்தக்கது." இங்ங்னம் ஆழ்வார்கள் பெண்மை நிலையிலிருந்து எம் பெருமானை அநுபவிக்கும் பொழுது அவர்களது பாசுரங்கள் தாய்ப் பாசுரமாகவும், தோழிப் பாசுரமாகவும், தலைவி பாசுரமாகவும் வடிவு கொள்ளும் என்பதை நாலாயிரத்தைப் படிப்போர் அறிவர். இப்படி மூவகையாகப் பாசுரங்கள் பரிணமித்துச் செல்வதற்குரிய உட்கருத்தினை ஆன்றோர்கள் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளனர். அவர்கள் இந்த மூன்று நிலைகலையும் மூன்று பிரஜ்ஞாவஸ்தைகள்’ என்று குறிப் பிடுவர். முதல் அவஸ்தையைப் பற்றிச் சிந்திக்கின்றோம். 'ஓம் நம: நாராயணாய என்பது மூன்று வைணவ இரகஸ்யங் களுள் (மறைகளுள்) முதலாவது; தலையாயது. இதில் மூன்று சொற்கள் அடங்கியுள்ளன. இவற்றுள் ஓம்’ என்னும் சொல்லின் பொருளையே ஏனைய இரண்டு சொற்களும் விரிவு படுத்துகின்றன. இந்த இரு சொற்களின் பொருளையே துவயம் என்னும் இரண்டாவது மறை விரிக் கின்றது. இத்துவயத்தின் பொருளையே 'சரமசுலோகம்’ என்ற மூன்றாவது மந்திரம் மேலும் விரிக்கின்றது. திரு மந்திரத்திலுள்ள மூன்று சொற்களிலும் * பிரணவம்’ அறிவுடைய ஆன்மாவின் அடிமைத் தன்மையையும் (சேஷத்துவத்தையும்), நமஸ்ஸு பாரதந்திரியத்தையும் 1. இறை-நூற்பா 2 (உரை காண்க) 2. ஆசர்ரிய. ஹிரு 133 பிரஜ்ஞாவஸ்தை-மூன்று காலத் தையும் அறியும் அறிவின் நிலை அவஸ்தை-நிலை,