பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 மலைநாட்டுத் திருப்பதிகள் (ஸ்ப்ரமசாரி - ஒரு சாலை மாணக்கர்; ஸ்தாநே - இடத்தில்) என்று குறிப்பிடுகிறது. "விண்ணோர் பிரானார், மாசுஇல் மலர் அடிக்கீழ் எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே' என்று ஆழ்வாரே அருளிச் செய்துள்ளமையால், பகவத் விஷயத்தில் கொண்டு சேர்க்குமவர்கள் பறவைகளாகக் கொள்ளப்படுவர். இரண்டு சிறகுகளைக் கொண்டு பறவைகட்கு எங்ங்னம் விசும்பில் பறந்து செல்லுதல் இயலுகின்றதோ அங்ங்ணம் ஞானம், ஒழுக்கம் (அநுட்டானம்) என்னும் இரண்டாலும் இறைவன் அடையப்படுகின்றான் என்பது ஆன்றோர் கொள்கை, எனவே, ஞானத்தையும் ஒழுக்கத்தையும் சிறகு களாகக் கொள்ளல் வேண்டும். ஆசாரியர்களும், ஒருசாலை மாணாக்கர்களும், புத்திரர்களும் இறைவனை அடையும் பேற்றுக்குத் துணையாக இருப்பார்கள் என்பது அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் கருத்து. இந்தப் பறவைகளிலும் அன்னம், வண்டு. முதலியவையாகச் சொல்லப்பெறுபவர்கள் இன்னார் இன்னார் போன்றவர்கள் என்றும் அருளிச் செய்யப்பெற்றுள்ளது. ஆழ்வாரின் பாசுரங்கள் ஒவ்வொன்றாக நம் சிந்தையில் எழத் தொடங்கு கின்றன. ஆழ்வார் நாயகி முதலில் குருகினங்களைப் பார்த்துப் பேசுகின்றாள்; திருவண்வண்டுர் எம்பெருமானிடம் சென்று தன்னுடைய காதன்மையைத் தெரிவிக்குமாறு இரக் கின்றாள். - ' வைகல்பூங் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்! செய்கொள் செந்நெல் உயர்திரு வண்வண் டூர்உறையும், 7. திருவிருத். 55 - 8. ஆசா. ஹிரு 151, 152, 153, 154.455, காண்க.