பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவண்வண்டுர் தேவாதிதேவன் 125 நேராகத் திருக்கோயிலுக்கே வந்து விடுகின்றோம். மாலை நான்கு மணிக்கே வந்து விட்டோமாதலால் திருக்கோயில் திருக்காப்பிடப் பெற்றிருக்கின்றது. ஆகவே அருகில் புதிதாக கட்டப் பெற்றிருக்கும் மண்டபத்தில் தங்கு கின்றோம். திருவண்வண்டுர் எம்பெருமான்மீது நம்மாழ்வார் மட்டிலுமே மங்களா சாசனம் செய்துள்ள பதிகத்தைச் சிந்திக்கின்றோம். இது தூது விடும் பதிகமாக உள்ளது. இதற்கு முன்னுள்ள பதிகத்தில் 'உன்னை என்று கொல் சேர்வதுவே' 'உன்ன்ை என்று தலைப் பெய்வனே' "உன்னை என்று கொல் கூடுவதே" என்றெல்லாம் கதறி எம்பெருமான் பக்கலிலே கடுகச் சேர வேண்டும் என்று பாரித் திருக்கும் ஆழ்வார் எம்பெருமான் திருவண்வண்டுரில் சந்நிதிபண்ணிக்கொண்டுத் தனக்குச் சேவை சாதிக்கச் சித்த மாக இருப்பதை நோக்குகின்றார். அங்குச் சென்று சேர முடியாத நிலைேையில் தன் நிலையை அந்த எம்பெரு மானுக்குத் தெரிவிக்குமாறு சில பறவைகளைத் துது விட்டதை நினைந்து பார்க்கின்றோம். இங்கு ஆழ்வார் தாமான தன்மையை விட்டுப் பாராங்குச நாயகி நிலையை அடைந்து தூது விடுகின்றார். குருகினங்கள், கரு நாரை, புள்ளினங்கள், அன்னங்கள், பூங்குயில்கள், கிளி, பூவை, வண்டினங்கள் இவற்றைத் தூது போகும்படி வேண்டுகின்றார். இங்ஙனம் பறவைகளைத் தூது விடுவதற்கு உட்பொருள் உண்டு. ஆசாரியஹிருதயம், சேர்ப்பாரைப் பட்சிகளாக்கி, ஜ்ஞாந கர்மங்களைச் சிறகு என்று, குரு ஸ்ப்ரம சாரி புத்ர சிஷ்ய ஸ்தாநே பேசும்’’’ 3. திருவாய் 5, 10 : ! 4. ைெடி 5, 10 : 2 5. டிெ 5, 10 : 9 6, ஆசாஹிரு 13.ெ