பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#24 மலைநாட்டுத் திருப்பதிகள் திருப்பவள் இவள். எம்பெருமான் சாத்தியாபாயமாக இருந்தால் தான் செய்யும் சாதனங்கள் முடிவுற்ற பிறகே சாத்தியமாகிற பேறு கிடைக்கக் கூடும் என்று பொறுத்திருக் கலாம். ஆனால் அவன் சித்தோபாயமாக இருப்பவன். ஆதலால் அவனைத் தாமதித்து அநுபவிப்பதற்குக் காரணம் இல்லை; அவனே உபாயம் என்ற கோட்பாட்டையும் மீறித் தான் நினைத்த பேற்றினை உடனே பெறவேண்டும் என்று பதற்றத்தை யுடையவளாக இருக்கின்றாள். இந்த மன நிலைதான் மகள் (தலைவி) என்று குறிப்பிடப்பெறு கின்றது. இந்த மூன்று நிலைகளும் (அவஸ்தைகளும்) நம்மாழ் வாருக்கு எல்லாக் காலங்களிலும் இருந்தன. இதனால் தான் "ஞானாவஸ்தைகள்’ (ஞான நிலைகள்) என்று கூறாமல் பிரஜ்ஞாவஸ்தைகள் (உணர்வு நிலைகள்) என்று குறிப்பிடப் பெற்றுள்ளது என்பதையும் நினைந்து பார்க்கின்றோம். திருவெட்டெழுத்தின் மூன்று சொற்களாலும் குறிப்பிடப் பெறும் பொருளைப்பற்றிய ஞானம் ஆழ்வாருடைய திருவுள்ளத்தில் எப்பொழுதும் நிலைத்தே இருக்கும் என்பதை உணர்த்தவே இவ்வாறு குறிப்பிடப் பெற்றது என்பதையும் சிந்திக்கின்றோம். இந்த எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் குமிழியிட்ட வண்ணம் திருவல்லவாழிலிருந்த வண்ணம் திருவண் வண்டுருக்குப் பேருந்து மூலம் புறப்படுகின்றோம். பேருந்தில் சென்றாலும் அது செல்லும் வழியெல்லாம். இயற்கைக் காட்சிகளுக்குக் குறைவில்லை. சாலையின் இருபுறமும் தோட்டங்களும் வயல்களும் கண்கவர்விருந்தாக அமை கின்றன. அவற்றைக் கண்டுகளித்த வண்ணம் எம்பெரு மானுடைய அசித்தும் அவனுடைய சித்திற்கு ஆனந்தத்தை அணிக்கும் தத்துவத்தை எண்ணி எண்ணி வியப்புக் கடலில் ஆழ்ந்த வண்ணம் திருவண் வண்டுரை அடைகின்றோம்.